Breaking News

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஹேக் செய்ததாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்ட விவகாரம் : அமெரிக்காவுடனான சர்வதேச சமூகத்துடன் கைகோர்த்தது ஆஸ்திரேலியா

மைக்ரோசாப்ட் எக்சேஞ்ச் மென்பொருள்களை தீங்கிழைக்கும் வகையில் சைபர் தாக்குதல் மூலமாக ஹேக் செய்த விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில் பல்வேறு நாடுகள் தொடர்ந்து அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து உள்ளன. அந்த வரிசையில் சர்வதேச சமூகத்துடன் சீனாவுக்கு எதிரான புகாரில் ஆஸ்திரேலியா கைகோர்த்துள்ளது.

2021 ஜனவரி மாதத்தில் நடைபெற்ற இந்த சைபர் தாக்குதலில் பல ஆயிரம் கணிணிகள் ஹேக் செய்யப்பட்ட நிலையல், சீனாவை சேர்ந்தவர்களை அமெரிக்கா குற்றம்சாட்டிய நிலையில் இந்த புகாரை மிகவும் கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவை பின்புலமாக கொண்ட ஹேக்கர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் Dominic Raab கூறியுள்ளார்.

China accused of hacking Microsoft, Australia joins hands with international community over US.ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர், வெளிநாடு விவகாரங்களுக்கான அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவகாரத்தில் உரிய முறையில் சீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக சைபர் தாக்குதல் மூலமாக ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் புகார் அளித்துள்ள நிலையில் அந்த சர்வதேச சமூகத்தில் ஆஸ்திரேலியாவும் இணைவதாக அமைச்சர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மற்ற நாடுகளோடு இணைந்து இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயல்படுவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

China accused of hacking Microsoft, Australia joins hands with international community over US,.சீன நிறுவனங்களுக்கும், அவர்களது வியாபாரத்துக்கும் உதவும் வகையில் அமெரிக்க அரசுத்துறைக்கு சொந்தமான கணினிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கணினிகளும் ஹேக் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 4 சீனர்கள் இந்த ஹேக் செய்யும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.

2017 முதல் ஆஸ்திரேலிய அரசு ஈரான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இதுபோன்ற சைபர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு வருவதாக பிரதமர் ஸ்காட் மோரிசன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய சர்வதேச சமூகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Link Source: https://ab.co/3kC9Jxj