Breaking News

பிரபல ரக்பி பயிற்சியாளர் திடீர் மரணம்- காரணம் என்ன?

தொழில்முறை ரக்பி லீக் கால்பந்து போட்டிக்க்கான பிரபல பயிற்சியாளர் பால் க்ரீன் திடீரென்று உயிரிழந்த சம்பவம் சர்வதேசளவில் விளையாட்டுத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Famous Rugby Coach Sudden Death- What Caused

ஆஸ்திரேலிய தொழில்முறை ரக்பி லீக் கால்பந்து பயிற்சியாளர் பால் கிரீன் தனது 49 வயதில் உயிரிழந்தார். குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் பகுதியைச் சேர்ந்த அவர், கொண்டாடப்பட்ட ரக்ஃபி விளையாட்டு வீரராகவும் இருந்தார்.

கடந்த வியாழன்று காலை பத்து மணியளவில், பிரிஸ்பேனிலுள்ள தனது வீட்டில் சுயநினைவில்லாமல் பால் மயங்கிக் கிடந்துள்ளார். உடனடியாக அவரை வின்னம் பகுதி மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். அப்போது பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

பிரபல ரக்பி பயிற்சியாளர் பால் க்ரீனின் மறைவுச் செய்தி ஒட்டுமொத்த விளையாட்டுத்துறையையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அரசியல் தலைவர்கள், விளையாட்டுத்துறை பிரபலங்கள் என பலரும் அவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உடற்கூராய்வு அறிக்கை வெளியானவுடன், பால் க்ரீன் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.