Breaking News

தைவான் விவகாரம்: ஆஸ்திரேலியாவுக்கு சீன தூதர் ‘எச்சரிக்கை’..!!

தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்பதற்கு தேவையான அனைத்து வழிகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தும் என ஆஸ்திரேலியாவுக்கான சீனாவின் தூதர் தெரிவித்துள்ளார்.

Taiwan Issue Chinese Ambassador 'Warning' to Australia

அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி ஃபெலோசி, தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதை அடுத்து சீன அரசியலில் பரபரப்பு உருவானது. அதை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கான சீன தூதர் ஷாவூ சியென் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தில் உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், ஆஸ்திரேலிய அரசு தைவான் விவகாரத்தை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தைவான் மீதான பெய்ஜிங்கின் உரிமைகோரல் நடைமுறையில் சமரசத்திற்கு இடமில்லை என்று திட்டவட்டமாக ஷாவூ சியென் கூறினார்.

மேலும் பேசிய அவர், இந்நாட்டிலுள்ள அரசாங்கம் சீனாவின் உணர்வுகள் சார்ந்த கொள்கையில் உறுப்பாட்டைக் கடைப்பிடிப்பது அவசியம். தைவானை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது. தேவைப்பட்டால் ராணுவத்தின் மூலம் தைவானை தனது கொண்டுவரவும் ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தயங்காது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் சாலமன் தீவுகள் நாட்டில் சீனா ஏற்படுத்தி வரும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தூதர் ஷாவூ சியென், ஹொனியாராவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, சாலமன் தீவுகளில் ராணுவ தளத்தை நிறுவும் எண்ணம் சீனாவுக்கு இல்லை என்று கூறினார்.