Breaking News

பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய ஊடகக் குறியீட்டுக்கு பிறகு ஃ பேஸ்புக் செய்தி வெளியிட முடிவு !

Facebook decides to publish news after media code passed in parliament

வியாழக்கிழமை அன்று அரசின் புதிய ஊடக bargaining code-ஐ பாராளுமன்றத்தில் அமல்படுத்திய பிறகு பேஸ்புக் ஆஸ்திரேலிய செய்தி உள்ளடக்கத்தின் மீது இருந்த தடையயை விலக்கியதற்கு காரணம் என்னவென்றால் bargaining code மூலமாக சமூக வலைவளத்தின் ஜாம்பவான்கள் செய்தி வெளியீட்டாளர்களுக்கு இழப்பீடு வழங்க கட்டாயப்படுத்தப்பட்டது.

ஆஸ்திரேலிய பயன்பாட்டாளர்களின் கட்டுரை இணைப்புகளை பகிரவோ அல்லது வெளியிடவோ திடீரென தடுத்து, அவ்வப்போது அதை பயன்படுத்தியபோது அவர்களுடைய புகைப்படங்களோ, கதைகளை அதில் ஏற்றவில்லை. அதில் இன்னும் பதிவுகள் இல்லை என்ற செய்தி உள்ளது.

இந்த நடவடிக்கை உலகம் முழுவதிலும் விமர்சிக்கப்பட்டது. இதனால் தவறான செய்திகள் பரவ வாய்ப்புள்ளது. ஆனால் புதன்கிழமையன்று ஃபேஸ்புக் , மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு செய்திகளை வெளியிட ஒப்புக் கொண்டது. இந்த புதிய சட்டம் செய்தி வெளியீட்டாளர்களுக்கு பெரிய நிறுவனங்கள் அவர்களுடைய உள்ளடக்கத்தை பயன்படுத்த பணம் செலுத்த அனுமதியளித்தது.

josh frydenberg imageஇது குறித்து, Josh Frydenberg கூறுகையில், இந்த சட்டம் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு பேச்சுவார்த்தைக்கு பிறகு சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஃபேஸ்புக் தலைமை நிர்வாகி Mark Zuckerberg உடனான தன்னுடைய உரையாடல் மரியாதை நிமித்தமானது என்றார்.

இதை பற்றி Scott Morrison கூறியபோது, சமூக ஊடக நிறுவனங்களின் அச்சுறுத்தல் இருந்தாலும் ஆஸ்திரேலிய மக்கள் தனக்கு ஆதரவாக இருந்ததாக கூறினார். உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகை மாற்றிக் கொண்டிருக்கிறது. அவர்களை உலகை ஆள அனுமதிக்கக்கூடாது. ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தான் ஆள வேண்டும் என்றார்.

ஃபேஸ்புக் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் இயக்குனர் William Easton கூறுகையில், அரசுடன் ஏற்பட்ட ஒப்பந்தம் ஆக்கபூர்வமானதாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றார்.