Breaking News

விக்டோரியாவில் அதிகரித்த கொரோனா பாதிப்பு ! பலி எண்ணிக்கை 700 மேல் உயர்வு

விக்டோரியாவில் மேலும் ஏழு பேர் கொரோனா தொற்றில் மரணம் அடைந்து உள்ளனர் . தற்போது இறப்பு மொத்த எண்ணிக்கை 701 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரையில் பலரதபட்ட பாதிப்புகளை கொண்டிருந்த வேளையில், வியாழக்கிழமை ஏழு பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை, மாநில அளவில் 701 ஆகவும் தேசிய அளவில் 788 ஆகவும் உயர்ந்து உள்ளது . ஆனால் புதன்கிழமை 76பேர்க்கு கொரோனா தொற்றை உறுதிப்படுத்திய அரசு, பிறகு 51 ஆக பாதிப்பு குறைந்ததையும் உறுதிப்படுத்தியது .

Apollo Bay உள்ள கழிவு நீர் பகுதிகள் மூலம் வைரஸ் பரவுவதற்கான அறிகுறிகள் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது .இதனால் சுகாதார அதிகாரிகள் அப்பகுதியை சோதனைகள் அதிகமாக நடத்தவுள்ளனர். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் இப்பகுதியில் எந்த ஒரு கொரோனா பாதிப்பும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் புதன்கிழமை அன்று மாநிலம் முழுவதும் எடுக்கப்பட்ட சோதனையில், செவ்வாய்க்கிழமை 8704 ஆக இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 16686 ஆக அதிகரித்துள்ளது. மாநில அளவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள ஆண்ட்ரூஸ்சின் அரசாங்கத்திற்கு இந்த ஊரடங்கும் ஒரு பெரிய பிரச்சினையாகவே தெரிகின்றது.

இது ஒரு புறம் இருக்க , அரசாங்கம் என்ன நடவடிக்கைகள் எடுக்க போகிறார்கள் என்று அவர்களது முடிவை கையெழுத்திட்ட பிறகு தான் போலீசாருக்கு தெரிய வருகிறது என்று திரு.பாட்டன் புலம்பி கொண்டு இருக்கிறார் . இதைப்பற்றி யாரும் என்னிடத்தில் ஆலோசனை கேட்கவே இல்லை என்று 3aw. எனும் ரேடியோவில் கூறியுள்ளார். மேலும் ஆண்ட்ரூஸ் ஊரடங்கு உத்தரவை பற்றி வருத்தப் படாமலேயே இருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து ஆண்ட்ரூஸ் கூறுகையில் “நான் எப்பொழுதும் வெளிப்படையாக இருக்கவே முயற்சிக்கிறேன், ஆனால் அது நடைமுறைக்கு ஒத்துவராது என்று எனக்கு நன்றாகவே தெரியும்” என்றும் ஆண்ட்ரூஸ் தன் கோவத்தை வெளிப்படுத்தி உள்ளார் .

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தலைமை சுகாதார அதிகாரி பிரட் சுட்டன் பல விதத்தில் தெளிவு படுத்தி உள்ளார் . மெல்போர்ன் நகரில் குடியிருப்பவர்கள் நான்காம் நிலை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்கள் ஆவர் . இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே ஊரடங்கு உத்தரவுக்கு உட்பட வேண்டும். காலை 5மணி முதல் இரவு 8மணி வரை அத்யாவசிய தேவைகள் அனைத்திற்க்கும் மக்கள் வெளியில் செல்லலாம் குறிப்பாக முதியவர்களுக்கான பாதுகாப்பு, அன்றாடம் உடற்பயிற்ச்சி மற்றும் தினசரி வேலை நிமித்தமாக செல்லலாம் .

அதற்காக சில விதிமுறைகளையும் அவர்கள் வரையறுத்துள்ளனர். விக்டோரியாவில் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும், சமூக இடைவேளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக 1.5 மீட்டர் சோசியல் டிஸ்டன்சிங் முறையில் நிற்கவேண்டும். கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறும் கூறியுள்ளார்