Breaking News

டெஸ்லா நிறுவனத்தின் தலைமையகத்தை கலிபோர்னியாவில் இருந்து மாற்ற திட்டம் : டெக்சாஸ் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்ய உள்ளதாக எலான் மஸ்க் அறிவிப்பு

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா தனது தலைமையகத்தை கலிபோர்னியாவில் இருந்து டெக்ஸாசுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதாக அதன் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் உடனான ஆண்டுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கலிபோர்னியாவில் வீட்டு வாடகைகள் மிக உச்சபட்சமாக இருப்பதன் காரணமாக தங்களது தொழிலாளர்களால் சமாளிக்க இயலவில்லை என்றும், இதனைக் கருத்தில் கொண்டே டெக்ஸாசுக்கு தலைமையகத்தை இடமாற்றம் செய்யவிருப்பதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான கால அளவு இன்னும் திட்டமிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

Elon Musk announces plans to relocate Tesla headquarters from California to Texas.இந்நிலையில், கலிபோர்னியாவில் கொரொனா கால முடக்க நிலை நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் டெஸ்லா நிறுவனத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் இதுதொடர்பாக எலான் மஸ்க் தலைமையகத்தை இடம் மாற்றுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. கலிபோர்னியாவின் Palo Anto பகுதியில் இருந்து, டெக்ஸாஸ் – Austin பகுதிக்கு டெஸ்லா தலைமையகத்தை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தங்களது விரிவாக்கப் பணிகளை கலிபோனியாவிலேயே தொடர்வதற்கும் டெஸ்லா நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Fremont, கலிபோர்னியாவில் டெஸ்லா நிறுவனத்தின் S, X, Y மற்றும் 3 ரக வாகனங்களின் உற்பத்தியை 50% அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதற்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் தரப்பில் இருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவனம் தனது 6 லட்சத்து 27 ஆயிரத்து 300 கார்களை விற்பனை செய்துள்ளது. மூன்றாவது காலாண்டில் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை சராசரியாக அதிகரித்திருப்பதாகவும் டெஸ்லா நிறுவனம் தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3DuROPy