Breaking News

விக்டோரியாவில் நேற்று ஒரே நாளில் 1965 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப் பணிப்பெண்கள் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தொடர்பறிதல் நடவடிக்கையை சுகாதாரத்துறை முடுக்கிவிட்டுள்ளது.

A corona infection was confirmed in 1965 people in a single day yesterday in Victoria. The Department of Health has stepped up communications as six flight attendants have been confirmed infected.

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 1965 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.5 பேர் உயிரிழந்துள்ளனர்.

A corona infection was confirmed in 1965 people in a single day yesterday in Victoria. The Department of Health has stepped up communications as six flight attendants have been confirmed infected,விக்டோரியா மாகாணத்தில் தொற்று பாதிப்பால் இதுவரை 80 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவில் தற்போது 17000 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான பணிப்பெண்கள் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக சம்பந்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

A corona infection was confirmed in 1965 people in a single day yesterday in Victoria. The Department of Health has stepped up communications as six flight attendants have been confirmed infected,,மேலும் விக்டோரியா மாகாணத்தில் சுமார் 84 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 56 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒருபுறம் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இரண்டாம் நிலை தொடர்புடையவர்கள் இனி தனிமை படுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் தற்போது தனிமையில் உள்ள 16 ஆயிரம் பேர் விரைவில் வெளி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் தங்களைத் தாங்களே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/3lAU0Pv