Breaking News

106 நாட்களுக்கு பிறகு நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு : 70 சதவீதம் பேர் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்ட நிலையில் முடக்க நிலை நீக்கப்படுகிறது

New South Wales eases 106 days of deregulation

நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் பலன்களும், பிரச்சனைகளும் சேர்ந்தே இருப்பதாகவும், இதனை மற்ற ஆஸ்திரேலிய மாகாணங்கள் உற்று நோக்கி வருவதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள உடற்பயிற்சி நிலையம், அழகு நிலையம், நீச்சல் குளம், உணவகம் உள்ளிட்டவற்றுக்கு செல்லலாம். இவற்றை திறந்த கொள்ள அனுமதிப்பதோடு குறிப்பிட்ட எல்லைக்குள் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் வைரஸ் பாதிப்பு களுக்கு எதிராக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கைகள் நாம் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகுவதற்கான தொடக்கம் என்று Curtin பல்கலைக்கழகத்தின் மக்கள் சுகாதாரத்துறை பேராசிரியர் Jaya Dantas தெரிவித்துள்ளார். மேலும், மேலும் இதுவே சரியான தொடக்கம் என்றும் இதன் மூலமாகவே நாம் பெருந்தொற்று காலத்தில் இருந்து விடுபட்டு நோய்த்தொற்று காலத்திற்கு மாற முடியும் என்றும் பேராசிரியர் கூறியுள்ளார்.

New South Wales eases 106 days of deregulation.அதிக அளவிலான தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆஸ்திரேலியாவில் பெருமளவு வைரஸ் பாதிப்பு களை கட்டுக்குள் கொண்டு வந்து இருப்பதாகவும், அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைகளை மேற்கொள்ள தொடங்கும்போது பின்னடைவை சந்தித்ததாகவும், அதிகரிக்கும் தொற்று பாதிப்பு களை கண்டறிய முடியாமல் திணறியதாகவும் பேராசிரியர் Jaya Dantas தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா முழுவதும் அனைத்து இடங்களிலும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை உபகரணம் கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும் என்றும் அது இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ விற்பனை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நவம்பர் 1-ஆம் தேதி முதல் வீடுகளிலேயே பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் Nasal Swab வசதிகள் கிடைக்கப் பெறும் என்றும், அதற்காக வசூலிக்கப்படும் தொகை மற்றும் எந்த வகையில் அவை வினியோகிக்கப்படும் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

அதேநேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது. 8 ஆயிரம் பேருந்துகள், ரயில்கள் மற்றும் கப்பல் உள்ளிட்ட சேவைகள் தொடங்கப்பட உள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கைகள் குறையாத நிலையில் பொது போக்குவரத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்காமல் பொதுப் போக்குவரத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது சவாலான ஒன்று என சிட்னி பல்கலைக்கழக பேராசிரியர் Yale Wong கூறியுள்ளார்.

முடக்க நிலை தளர்த்தப் பட்டாலும் அதில் இருக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து உரிய தீர்வுகளை நாம் முன்கூட்டியே உருவாக்க வேண்டும் என்றும், பெரும்பாலான உலக நாடுகளை நாம் இது போன்ற தருணங்களில் பார்த்திருப்பதாகவும் மக்கள் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து துறை சார்ந்த நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்குச் செல்வது கொண்டாட்டங்களை மேற்கொள்வது மேலும் தொற்று பாதிப்புக்கு வழி ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://bit.ly/3Ds3N01