Breaking News

விக்டோரியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நேற்றை விட தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

Eleven people died of corona infection in a single day yesterday in Victoria. But the incidence of infection is slightly lower than yesterday.

விக்டோரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71,451 நபர்களிடம் மேற்கொள்ள்பபட்ட பரிசோதனையில் 1420 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். மாகாணத்தில் ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த 11 பேருடன் சேர்த்து தொற்றால் இதுவரை 68 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Eleven people died of corona infection in a single day yesterday in Victoria. But the incidence of infection is slightly lower than yesterday..நேற்றை விட தொற்று குறைந்துள்ளது சுகாதாரத்துறையை சற்று நிம்மதியடைய செய்துள்ளது. அதே நேரம் ஜி.டி.ஏ போட்டித் தேர்வெழுதிய மாணவர்கள் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக் கருவியை கொள்முதல் செய்வதற்கு விக்டோரிய மாகாண சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது .

சுமார் 22 லட்சம் ரேபிட் பரிசோதனைக் கருவியை முதற்கட்டமாக கொள்முதல் செய்வதற்கு சுகாதாரத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களை அடையாளப்படுத்தவும் தொடர்பறிதல் நடவடிக்கைகளை விரைவுபடுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசி செலுத்துவோரின் எண்ணிக்கை நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு விக்டோரியாவில் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ளன. இந்த தளர்வுகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Eleven people died of corona infection in a single day yesterday in Victoria. But the incidence of infection is slightly lower than yesterday.,புதிதாக மாகாணத்திற்கு நுழைய கூடியவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கிடைத்த பிறகே அவர்கள் தனிமையில் இருந்து வெளிவர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் மற்றும் கிராண்ட் பினாலே போன்ற நிகழ்வுகள் விக்டோரியாவில் கடந்தவாரம் அதிகபட்சமாக தொற்றுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்ததாகவும் மருத்துவத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கு முன்னதாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 1521 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதே அதிகபட்சமாக இருந்து வந்தது. தொடர்ந்து அதிகரிக்கும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மருத்துவ கட்டமைப்பு மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றும், குறிப்பாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முன் களப்பணியாளர்கள் கடுமையாக நெருக்கடியை சந்திக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த விக்டோரியா மகான பிரிமியர் டேனியல் ஆண்ட்ரூஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க கூடிய நிலை ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார். 80% பேருக்கு இரண்டு சதவீத தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு தற்போது இருக்கக்கூடியது கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Eleven people died of corona infection in a single day yesterday in Victoria. But the incidence of infection is slightly lower than yesterday,அந்த இலக்கு அக்டோபர் 26ஆம் தேதி எட்டப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் ஒரு சில வாரங்கள் பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 6 நாட்களாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதே நிலை தொடர்ந்தால் அக்டோபர் 19-31 இடையே தினசரி சுமார் 2900 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்படும் நிலை ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் சுமார் 82% பேர் முதல் தவணைத் தடுப்பூசியும் 52% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர். விக்டோரியாவின் தற்போது 14 ஆயிரத்து 368 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். விக்டோரியா சிறைகளிலும் சுமார் 52 பேருக்கு கோவிட் தொற்று செய்யப்பட்டுள்ளது.

அதில் முப்பத்தி ஆறு பேர் சிறைக்கைதிகள் என்றும் 16 பேர் சிறை பணியாளர்கள் என்பது தெரியவந்துள்ளது அதேபோன்று விக்டோரியாவின் புறநகர் பகுதிகளில் தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்ட இடங்களை கண்டறிந்து அந்த இடத்தில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

Link Source: https://ab.co/3oFGxYg