Breaking News

கொளு கொளு கரடி போட்டியில் ஓட்டிஸ் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

Otis wins title for fourth time in bear race.

ஆஸ்திரேலியாவின் அலாஸ்கா காட்மாய் தேசிய பூங்கா 40 லட்சம் சதுர ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2200 பழுப்பு நிற கரடிகள் வாழ்ந்து வருகின்றன.

கரடிகள் குளிர்காலத்திற்கு தயாராகும் வகையில், ஏராளமான மீன்களை உண்டு அதிக அளவில் தங்கள் உடலில் கொழுப்பு சத்துக்களையும், கார்போ ஹைட்ரேட்டுகளையும் சேமித்து வைத்துக்கொள்ளும். ஏனெனில் சுமார் 4 மாதங்கள் வரை நீடிக்கும் குளிர்காலத்தின் போது போதிய உணவு கிடைக்காமல் போகலாம். எனவே அதனை தவிர்ப்பதற்காக தன்னுடைய உடலில் அதிக அளவு சக்தியை சேமித்துக்கொள்வதற்காகவே இயற்கை இந்த தகவமைப்பை கரடிகளுக்கு வழங்கியுள்ளது.

Otis wins title for fourth time in bear raceஅந்த வகையில் மிக விரைவாக தன்னுடைய உடல் எடையை கூட்டும் கரடி எது என்பதை கண்டறிய ஆன்லைன் போட்டி நடைபெற்றது. அந்த வகையில் சுமார் 6000 வாக்குகளை கூடுதலாக பெற்ற ஓட்டிஸ் என்ற கரடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஓட்டிஸ், வால்கர் என்ற கரடியை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஜூலை மாதம் மிகவும் ஒல்லியான தேகத்துடன் காணப்பட்ட ஓட்டிஸ், சுமார் 3 மாதங்களிலேயே கொளு கொளு கரடியாக மாறியுள்ளது. இது குறித்த புகைப்படங்களை தேசிய பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே ஓட்டிஸ் 2014,2016,2017 ஆகிய வருடங்களில் இதே பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. கேனின் பற்கள் என்று அழைக்கப்படும் , கோரப்பற்களை ஓட்டிஸ் இழந்திருந்தாலும் இப்போட்டியில் மக்களின் மனம் கவர்ந்துள்ளது. மிக சாதாரணமாக காட்சியளிக்கும் ஓட்டிஸ் சாலமன் வகை மீன்களை வேட்டையாடுவதில் கில்லாடி என்று பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக 453 கிலோ எடை வரை வளரும் பழுப்பு நிற கரடிகள், ஒரு வாரத்திலே தங்கள் உடல் எடையை 13 கிலோ வரை கூட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3oDtoyW