Breaking News

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் 23 கோடி பேரின் தினசரி வருவாய் தேசிய சராசரிக்கு கீழ் சென்றுள்ளதாக அஸீம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அஸீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையில் சுமார் 23 கோடி பேரின் தினசரி வருவாய் 375 ரூபாய்க்கு கீழ் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

கிராம பகுதிகளில் இந்த வருவாய் இழப்பு 15 சதவீதமும், நகர் பகுதிகளில் 20% ஏற்பட்டிருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச்- அக்டோபர் மாதங்களுக்கிடைய, குறைந்த வருவாய் பிரிவில் கடைசி இடத்தில் இருக்கும் குடும்பங்களில் வருவாய் 10%, அதாவது 15,700 இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

சுமார் 15 மில்லியன் மக்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும், தெரிவித்துள்ளது.

ஊரடங்கு பிறப்பிக்கப்படட முதல் இரண்டு மாதங்களில் சுமார் 10 கோடி பேருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது என்றும், பின்னாட்களில் 8.5 கோடி பேருக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளது.

சராசரியாக இந்திய பணியாளர்களின் வருவாய் 17% விழ்ச்சியடைந்துள்ளதாகவும், 2010 ஆம் ஆண்டு 15,210 ரூபாயாக இருந்த மாத வருவாய் 2020ல் 12625 ரூபாயாக வந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது.

Due to the economic impact of Corona in India The daily income of 23 crore people has gone below the national average, according to a study by Azim Premji Universityமாத ஊதியம் பெரும் இந்தியர்களின் சராசரி வருவாய் 5% வரை குறைந்துள்ளது. சுய வேலைவாய்ப்பு மற்றும் தற்காலிக பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் வருவாய் சுமார் 18% வரை குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது. தினசரி கூலி வேலை செய்பவர்களின் கூலியும் 13% விழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்திய அஸீம் பிரேம்ஜி பல்கலைக்கழக த்தின் பொருளாதார துணை பேராசிரியர் அமித் போஸ்லே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் அந்த வருவாய் இழப்பில் இருந்து இன்னும் மீண்டுவரமுடியாத நிலையில், இரண்டாம் அலை சாமான்ய மக்கள் மத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துள்ளார் .

கொரோனா பெருந்தொற்று மகாராஸ்ட்ரா, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் அதிகளவு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுமார் 47% பெண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் அலையில் இருந்து மக்களை பாதுகாக்க பொருளாதார தளத்தில் சில பரிந்துரைகளை இந்த குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் பொது விநியோக திடடத்தில் 2021 வரை இலவச ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும், பொருளாதார ரீதியாக பின்தங்கி உள்ளவர்களுக்கு 5000 ஆயிரம் ரூபாய் நிதியதவி, ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலைநாட்களை 150 நாட்களாக உயர்த்துவது, அதற்கான கூலியை உயர்த்துவது போன்ற பரிந்துரைகளை அஸீம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது.

ஒன்றிய அரசு கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்க 5.5 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3b61nZo