Breaking News

ஆஸ்திரேலியாவின் பராம்பரிய சுற்றுத்தலமான Kakadu தேசிய பூங்கா மூடல் : புனிதத் தன்மையை சீர்குலைப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு

Closure of Australia's traditional tourist site Kakadu National Park. Case filed in court for violating sanctity

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நாடுகளில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், சுற்றுலா தளங்கள், பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் கன்லோமில் உள்ள Kakadu தேசிய பூங்கா மூடப்பட்டு்ள்ளது. அப்பகுதியின் சுற்றுலா சீசன் உச்சத்தில் இருக்கும் இந்த நேரம் பூங்கா மூடப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் பாரம்பரிய சுற்றுலா தளத்தை முறையாக பராமரிக்கவில்லை என்றும், அதன் புனித்தன்மை சீர்குலையும் அளவிற்கு நடந்து கொண்டதாகவும் கலாச்சார காவலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும் அவர்கள் நீதிமன்றத்தை நாடி பூங்காவை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

பராம்பரியமான இந்த தலத்தை பாதுகாக்க இதுவே வழி என்றும், சுற்றுலா பயணிகள் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். கன்லோம் தேசிய பூங்காவில் அருவிக்கு அருகில் நடைபாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும், ஆனால் அங்கு சட்டவிரோதமாக ஒரு பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

Closure of Australia's traditional tourist site Kakadu National Park.. Case filed in court for violating sanctityபராம்பரிய இடங்கள் பாதுகாப்பு அமைப்பு, கன்லோம் நில உரிமையாளர்கள் அறக்கட்டளை, பார்க்ஸ் ஆஸ்திரேலியா ஆகிய அமைப்புகள் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக தங்களது வாத பிரதிவாதங்களை முன்வைத்து வருகின்றன. இந்நிலையில், வழக்கு முடியும் வரை Kakadu தேசிய பூங்காவை திறக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சீசன் காலத்தின் மிகப்பெரிய பூங்கா மூடப்படுவது அதனை சார்ந்துள்ள பல்வேறு தரப்பினருக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக பூங்காவை திறக்க நடவடிக்கைக எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கன்லோம் அமைப்பிடம் பார்க்ஸ் ஆஸ்திரேலியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், சுற்றுலா தளங்களின் புனிதத் தன்மை கெடாத வகையில் அதனை பாதுகாப்போம் என உறுதி அளிப்பதாகவும் கூறப்பட்டு்ள்ளது.

Link source: https://ab.co/2RokAOX