Breaking News

அடுத்த இரண்டு வாரங்கள் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது சவாலானது : நியூ சவுத் வேல்ஸ் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

கிழக்கு ஊரகப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம், விடுதி தனிமைப்படுத்துதல் எதுவுமின்றி எதன் மூலம் குறிப்பிட்ட நபருக்கு தொற்று பரவியதை என்பது கண்டறியமுடியாமல் உள்ளது.

இந்நிலையில், அந்த நபர் சென்ற இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

raina macintyre australiaஅடுத்த இரண்டு வாரங்களில் தான் வைரஸ் தீவிரம் அதிகரிப்பது, பரவுவது குறித்து அறிய முடியும் என்றும், அதுவரை சவாலான கால கட்டம் என்றும் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக தொற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் Raina MacIntyre கூறியுள்ளார். தொற்று பாதித்த நபருக்கு யார் மூலம் தொற்று பரவல் எற்பட்டது என்பதை கண்டறிய முடியாத அளவுக்கு மிகவும் குழப்பமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடைசி மூன்று நாட்களில் சிட்னி மற்றும் கிழக்கு மத்திய பகுதிகளில் கடை வீதிகளுக்கு அவர் சென்று வந்துள்ளார் என்றும், அவரது உடலில் தொற்றின் தீவிரம் மிக அதிகமாக காணப்படுவதாகவும் இதுவே கவஙைக்குரிய ஒன்றாக இருக்கிறது என்றும் Raina MacIntyre குறிப்பிட்டுள்ளார்.

Controlling the spread of the disease over the next two weeks will be a challenge New South Wales medical experts warn.அதே நேரத்தில், குறிப்பிட்ட பகுதிகள் முழு கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு்ள்ளது. நியூ சவுத் வேல்ஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் சரியான திசையில் செல்வதாக நிபுணர் பென்னட் தெரிவித்துள்ளார். முழு ஊரடங்கு தேவை தற்போது இல்லை என்றும், சமூகத் தொற்றாக மாறவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுவரை 24 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களும் மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளி, தூய்மைப்படுத்திக் கொள்வது என்பதை தவறாமல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்த வாரத்தில் தொடங்கும் தடுப்பூசி திட்டம், விரைவில் வேகப்படுத்தப்பட்டு மற்ற வயதினருக்கும் விரிவுபடுத்தப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3b4v5hx