Breaking News

போதைமருந்து கிங் பின் Tse Chi Lop-ஐ ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்கலாம் : டச்சு நீதிமன்றம் ஒப்புதல் அளித்து உத்தரவு

சீனாவில் பிறந்த கனடிய நாட்டைச் சேர்ந்த Tse Chi தைவானில் இருந்து கனடாவுக்குச் செல்லும்போது Lop தைவானில் இருந்து கனடாவுக்குச் செல்லும்போது ஆஸ்திரேலிய காவல்துறையின் வேண்டுகோளின் பேரில் ஆம்ஸ்டர்டாமின் ஷிபோல் விமான நிலையத்தில் ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.

மெக்சிகன் போதைப்பொருள் கும்பலின் தலைவனாக பார்க்கப்படும் El Chapo உடன் ஒப்பிடப்பட்டு போதைப்பொருள் கிங் பின்னான Tse Chi Lop -ஐ தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று டச்சு நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியா முறையிட்டது. கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் போதைப்பொருள் சிண்டிகேட் தலைவனான Tse Chi Lop-ஐ ஆஸ்திரேலியாவிடம் ஒப்படைக்க ஒப்புதல் அளித்துள்ளது.

ஆண்டு ஒன்றுக்கு 90 மில்லியன் டாலர் அளவுக்கு ஆசிய பசுபிக் -ல் போதை மருந்து வர்த்தகத்தை Tse Chi lop மேற்கொண்டு இருந்ததாக ஆஸ்திரேலிய பெடரல் போலீஸ் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் போதைப்பொருள் சிண்டிகேட் நபரை ஒப்படைப்பது தொடர்பான இறுதி முடிவை டச்சு அரசாங்கமே எடுக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Drug King Tse Chi Lop can be extradited to Australia.ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கிறிஸ்டல் Methamphetamine போதைப்பொருள் வர்த்தகத்தை கடந்த ஐந்து ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்த குற்றமும் சம்பந்தப்பட்ட சிண்டிகேட் கிங்பின் Tse Chi Lop மீது சுமத்தப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய நாடுகளுக்கான போதைப்பொருள் மற்றும் குற்றத் தடுப்பு அமைப்பான UNDOC உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் கைது நடவடிக்கையின் போது காவல்துறையினர் 42 கிலோ கிராம் போதைப் பொருட்களையும் 4 மில்லியன் டாலர் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

லத்தின் அமெரிக்காவில் மிகப்பெரிய போதை பொருள் சந்தையை உருவாக்குவதில் சிண்டிகேட் தலைவனாக செயல்பட்ட El Chapo வின் வழியாக தற்போது Tse Chi Lop இருப்பதாகவும் UNDOC அமைப்பின் வடகிழக்கு ஆசிய பசிபிக் பிரதிநிதி கூறியுள்ளார். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள Tse Chi Lop தான் ஒரு போதைப்பொருள் சிண்டிகேட் கிங்பின் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/2Ttq8t5