Breaking News

ஆஸ்திரேலிய துணை பிரதமர் Barnaby Joyce மறுசீரமைத்த அமைச்சரவை பதவியேற்பு : Zoom செயலி வழி பதவியேற்பில் நடந்த குழப்பம்

Australian National Party leader Barnaby Joyce re-elected as Deputy Prime Minister

Michael McCormack தோற்கடித்து கடந்த மாதம் நடைபெற்ற துணை பிரதமர் தேர்தலில் Barnaby Joyce வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் மறுசீரமைப்பு செய்த அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டது. இந்த பதவியேற்பு நிகழ்வில் சில சர்ச்சைகளும் குழப்பங்களும் ஏற்பட்டது.

மறுசீரமைப்பு செய்யப்பட்ட அமைச்சரவை உடனடியாக பதவி ஏற்க வேண்டும் என்று அவசரம் கட்டப்பட்டதால் Zoom செயலி வழியாக பதவி ஏற்பு விழா நடத்தப்பட்டது. இதில் பிரதமர் ஸ்காட் மோரிசன், துணைப்பிரதமர் பர்னபி ஜாய்ஸ் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Michael McCormackவிளையாட்டுத்துறை ஊழல் காரணமாக ராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட Bridget McKenzie’s தற்போது மீண்டும் அமைச்சராகி உள்ளார். வளங்களுக்கான அமைச்சர் Keith Pitt தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யாமல் பதவியேற்பில் பங்கேற்ற நிலையில், கவர்னர் ஜெனரல் David Hurley இடைமறித்து Keith Pitt குரல் கேட்காதது குறித்து கவனத்திற்கு கொண்டு வந்தார். அமைச்சரவை மறு சீரமைப்பு செய்யப்பட்டு துறைகள் ஒதுக்கப்பட்டதில் Keith Pitt அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று விமர்சகரான Darren Chester, துணைப்பிரதமர் பர்னபி ஜாய்ஸ் செய்துள்ள மறுசீரமைப்பு பொருத்தமற்றது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

வீரர்களின் விவகார துறையிலிருந்து Pitt நீக்கப்பட்டு புதிய அமைச்சராக Andrew Gee நியமிக்கப்பட்டார். இது துணைப் பிரதமராக McCormack வருவதற்கு காட்டப்படும் விசுவாசம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Link Source: https://bit.ly/3wcF7Vq