Breaking News

பிரிட்டன் அரச குடும்ப வாழ்வைத் துறந்த ஹாரி மற்றும் மேகன் தம்பதிகளின் அண்மைக்கால நிகழ்வுகளை தழுவி வெளிவரவுள்ள எஸ்கேப்பிங் தி பேலஸ் என்ற திரைப்படத்தின் டிரையிலர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாரி மற்று மேஹன் வாழ்வில் நடந்த அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பாக திரைப்படம் ஒன்று வெளியாக உள்ளது.

இந்த திரைப்படம் குறித்து ட்ரெய்லர் லைப் டைம் டிவியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்கேப்பிங் தி பேலஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஹாரி கதாபாத்திரத்தில் நடிகர் Jordan Dean ம், மேகன் கதாப்பாதிரத்தில் Sydney Mortonம் நடித்துள்ளனர்.

2017 ஆம் ஆண்டு ஹாரி மேகன் தம்பதிகளின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இப்படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

The trailer for the upcoming film 'Escaping the Palace' has been releasedஅரசு பட்டத்தை திறப்பதற்கு முன் அவர்கள் எதிர்கொண்ட சூழ்நிலை, அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் என்பது போன்ற பல விஷயங்கள் இந்த டிரைலரில் இடம் பெற்றிருக்கின்றன. இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புகழ்பெற்ற ஓப்ரா வின்ப்ரே நேர்காணலின் போது அவர்கள் இருவரும் தெரிவித்த கருத்துக்கள் உலக அளவில் பெரும் விவாதமாக மாறிய நிலையில் அந்த காட்சிகளும் இந்த திரைப்படத்தில் இடம்பெறும்.

லைப் டைம் டி.வி அரச குடும்ப நிகழ்வுகளை வைத்து ஏற்கனவே 2 படைப்புகளை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://bit.ly/3xdOvtf