Breaking News

குயின்ஸ்லாந்து மாகாணத்தின் முன்னாள் காப்பாளர் அதிகாரிகளை பயன்படுத்தி ஆவணங்களை திருத்தவில்லை : ப்ரீமியர் நியமித்த ஆணையத்தின் விசாரணையில் வெளியான தகவல்

Documents not edited using former Queensland Guardians. Information released by the Premier-appointed Commission of Inquiry

குயின்ஸ்லாந்து மாகாணத்தின் முன்னாள் காப்பாளர் அதிகாரிகளுக்கு கடுமையான அழுத்தம் தந்து ஆண்டு அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டுகளை அடுத்து முன்னாள் காப்பாளர் குறித்து விசாரணை நடத்துவதற்கு குயின்ஸ்லாந்து பிரீமியர் Annastacia Palaszczuk ஆணையம் ஒன்றை அமைத்திருந்தார். அந்த ஆணையம் நடத்திய விசாரணையில் முன்னாள் காப்பாளர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து ஆவணங்களை திருத்தவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

Documents not edited using former Queensland Guardians. Information released by the Premier-appointed Commission of Inquiry.குயின்ஸ்லாந்து மாகாணத்தில் அரசு ஆவணங்கள் காப்பகத்தின் காப்பாளராக கடந்த மார்ச் மாதம் வரை ஐந்து ஆண்டுகள் செயல்பட்டு வந்தவர் Mike Summerell. இவர் கடந்த ஆண்டு மாகாணத்தின் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்ட பக்கங்களில் இருந்த எதிர்மறையான கருத்துக்களை அதிகாரிகளுக்கு அழுத்தம் தந்து நீக்கியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக John McKenna தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் இது குறித்த விரிவான விசாரணையை நடத்தியது.

விசாரணையில் முன்னாள் காப்பாளர் மீதான 3 புகார்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டது ஆண்டு அறிக்கையில் எதிர்மறையான கருத்துக்கள் நீக்கப்பட்டது, அதிகாரிகளுக்கு முறையற்ற அழுத்தம் அளித்தது மற்றும் தனது அதிகாரத்தை மீறி அரசுக்கு எதிராக உள்ள கருத்துக்களை நீக்க முயன்றது உள்ளிட்ட புகார்கள் காப்பாளர் Mike Summerell மீது முன்வைக்கப்பட்டது.

2017-18, 2018-19 புதிய ஆண்டுகளில் பொதுப்பணித்துறை மற்றும் வசதித்துறை ஆதி அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொண்டு அழுத்தம் அளித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில் புள்ளிவிவரங்கள் கோரும் வகையிலேயே காப்பாளர் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டதாகவும் அவர் எந்த விதமான அழுத்தங்களையும் அதிகாரிகளுக்கு அளிக்கவில்லை என்றும்ன விசாரணையில் தெரியவந்துள்ளது.

Documents not edited using former Queensland Guardians. Information released by the Premier-appointed Commission of Inquiry...ஆண்டறிக்கையில் எந்தவித திருத்தங்களையும் காப்பாளர் Mike Summerell மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தனது பணியை முழுமையாகவும் சரியாகவும் மேற்கொண்டிருப்பதாகவும் விசாரணை அதிகாரி John McKenna கூறியுள்ளார். இதனிடையே குயின்ஸ்லாந்து மாகாண பிரிமியரால் உத்தரவிடப்பட்டு நடத்தப்பட்ட இந்த விசாரணை சுதந்திரமான விசாரணையாக அமையவில்லை என்றும் தன்னிடம் இருந்த ஆவணங்கள் மற்றும் இமெயில் பரிமாற்றங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தான் விசாரணை அதிகாரியுடன் பகிர்ந்து கொண்டதாகவும், ஆனால் விசாரணையின் போக்கு உரிய முறையில் நடந்ததாக உணரவில்லை என்றும் முன்னாள் காப்பாளர் Mike Summerell தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3IJJz54