Breaking News

ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை இந்தியா கைவிட வேண்டும் : காணொலியில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள்

India must abandon pro-Russian stance. US President Joe Biden appeals at video conference on Quad Summit

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் ஐநா பாதுகாப்பு அவையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதை கண்டனம் செய்யும் தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது. ஐ.நா பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்ட கண்டனத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது.

இதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத் துறையின் இணைச் செயலாளார் டோனால்ட் லூ, ரஷ்ய ஆதரவு நிலையை இந்தியா மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். குவாட் கூட்டமைப்பில் இந்தியாவை தவிர அமெரிக்கா, ஜப்பான் ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

India must abandon pro-Russian stance. US President Joe Biden appeals at video conference on Quad Summit.இதனிடையே குவாட் கூட்டமைப்பின் அவசர கூட்டத்தை நடத்துவதற்கு அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், காணொளி வாயிலாக இந்த கூட்டமைப்பின் ஆலோசனை நடைபெற்றது. இதில் அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் Kishida Fumio பங்கேற்றனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்பாக பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு நிலையில் கூட்டமைப்பின் நாடுகள் தனது கண்டனத்தை ரஷ்யாவுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு உறுதியானதாக இருக்கவேண்டும் என்றும், இந்த நிலை இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் தொடருவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்தியாவைச் சேர்ந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் பயின்று வரும் நிலையில் அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடுமையாக மேற்கொள்ளும் பட்சத்தில் அங்கு உள்ள மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் அடிப்படையில் இந்தியா செயல்படுவதாக கூறப்படுகிறது.

ரஷ்யாவுடன் நீண்டகால ஆழமான உறவைக் கொண்டுள்ள இந்தியா இந்த விவகாரத்தில் அந்நாட்டின் உதவியை எதிர்பார்க்கிறது. இந்திய மாணவர்களை முழுமையாக அங்கிருந்து மீட்கும் வரை எந்த ஒரு நிலைப்பாட்டையும் உறுதியாக மேற்கொள்ள இந்தியா தயங்கும் என்று பாதுகாப்பு துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் எல்லைப் பிரச்சினை நீடித்து வரும் நிலையில் இந்தியா தற்போது வரை பல்வேறு ராணுவ தளவாடங்களை ரஷ்யாவிலிருந்து வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. பிரான்ஸ், அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியா ராணுவத் தளவாடங்களை வாங்கினாலும் ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து ராணுவ படைகளுக்கான உதவிகள் கிடைத்து வருவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து குவாட் நாடுகளின் ஆலோசனைக் கூட்டத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்தும், மனிதாபிமான அடிப்படையில் சுமூகமான தீர்வை எட்டுவதற்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ரஷ்யா போரை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்தியா மேற்கொண்டுள்ள நிலைப்பாடு காரணமாக தற்போது நடத்தப்பட்ட குவாட் ஆலோசனைக் கூட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவும், தங்களுடைய உறுதியான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக் கொண்டுள்ளன.

Link Source: https://ab.co/3txDItj