Breaking News

மடகாஸ்கர் தீவு கடற்பகுதியில் 420 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மீன் வகை உயிருடன் கண்டறியப்பட்டது ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

The discovery of a fish species that lived 420 million years ago off the coast of the island of Madagascar has taken researchers by surprise.

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ளது மடகாஸ்கர் தீவுப்பகுதி. சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியில் மிக அபூர்வமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில் சுறா வேட்டையாடும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்தவர்களின் வலையில் இந்த மீன் வகை சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

coelacanth என்று அழைக்கப்படும் இந்த வகை மீன், டைனோசர் காலத்திற்கு முன்பு வாழ்ந்தது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மீன் இதற்கு முன்பு 1938 ஆம் ஆண்டு பார்க்கப்பட்டதாகவும், அதற்கு பிறகு இந்த மீன் இனம் அழிந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்டு வந்தது.

coelacanthதென்னாப்ரிக்க கடற்கரையில் கண்டறியப்பட்ட இந்த coelacanth தற்போது மடகாஸ்கர் தீவுப்பகுதியில் கண்டறியப்பட்டது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் 328-492 அடி ஆழத்தில் கண்டறியப்பட்ட இந்த coelacanth, சுறா வேட்டைக்கு பயன்படுத்தப்படும் கில் நெட் வலையில் சிக்குவது அதிகரித்துள்ளது.

420 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இந்த coelacanth வகை மீன்களுக்கு 8 துடுப்புகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சுறா வேட்டையாடுபவர்களின் கவனம் தற்போது இந்த அபூர்வ மீன் மீது திரும்பியுள்ளதாகவும், அழிவின் விழிப்பில் இருக்கும் இவ்வகை மீனை பாதுகாக்க உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மடகாஸ்கர் கடல்சார் பாதுகாப்பு அதிகாரி Paubert Tsimanaoraty, coelacanth வகை மீன்கள் திட்டமிட்டு பிடிக்கப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

வித்தியாசமான மீன் வகைகளை மக்கள் பெரும்பாலும் தவிர்ப்பார்கள் என்றும், இந்த மீன் வகைகளுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3yiM5u8