Breaking News

சீனா தன்னுடைய விண்கலத்தை வெற்றிகராமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தி வெளியிட்ட சீன அரசின் செய்தி ஊடகம், கடந்தாண்டு ஜூலை மாதம் செய்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மார்க் 5 தொலைதூர ராக்கெட் வெற்றிகரமாக இலக்கை அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹினான் தீவில் இருந்து ஏவப்படட இந்த ராக்கெட்டில் Tianwen-1 என்ற விண்கலமும், அதில் Zhurong என்ற ரோவர் கருவியும் செலுத்தப்பட்டது.

ஆறுமாத கால பயணத்துக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் செய்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதை அடைந்த Tianwen விண்கலத்தில் இருந்து பிரிந்த லேண்டர் கருவி கடந்த சனிக்கிழமை செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் பத்திரமாக தரையிரங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

China has announced the successful landing of its spacecraft on Mars.முன்கூட்டியே திட்மிட்ட தெற்கு உட்டோப்பியன் பகுதியில் இந்த லெண்டர் கருவி தரையிரங்கியது மூலம் செய்வாய் கிரகத்தில் லெண்டர் கருவியை வெற்றிகரமாக தரையிறங்கிய இரண்டாவது நாடு என்ற சாதனையை படைத்துள்ளது. ஏற்கனவே அமெரிக்கா இந்த சாதனையை புரிந்துள்ளது. லேண்டர் கருவி வெற்றிகரமாக தரையிரக்கப்பட்டாலும், செய்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து லெண்டர் கருவியின் வேகத்தை குறைத்து மெல்ல மெல்ல தரையிறங்கிய அந்த 9 நிமிடங்கள் மிகவும் சவால் நிறைந்தது என்று சீனா தெரிவித்துள்ளது.

இந்த zhorong ரோவர் கருவியில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன கேமராக்கள், செவ்வாயின் மேற்பரப்பை படம்பிடித்து பூமிக்கு அனுப்பும். மேலும் அங்கு நிலவும் தட்பவெப்ப நிலை, நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் ஆகியவற்றை கண்டறியும் வகையில் அதன் செயல்பாடுகள் இருக்கும்.

சீனா செய்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3fma82U