Breaking News

புலம்பெயர் தமிழ் குடும்பமான பிரியா – நடேஸ் பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் சந்தித்தனர் : மருத்துவத் தேவைக்காக தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டது விசா பெறுவதற்கான வழி அல்ல என குடியேற்ற அமைச்சர் விளக்கம்

Diaspora Tamil family Priya -met at Perth Children's Hospital

பிலோலா தீவில் இருந்த புகலிடக் கோரிக்கை குடும்பமான பிரியா நடேஷ் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது. இந்நிலையில் இவர்களது இரண்டாவது மகள் தாருனிகா, ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பெர்த் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தாய் பிரியா மட்டுமே இருந்து வந்தார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் தீவில் தனியாக உள்ள தந்தை நடேஷ் மற்றும் மூத்த மகள் கோபிகாவை குடும்பத்துடன் சேர்ந்து இருக்க அனுமதிக்குமாறு அரசுக்கு குடியேற்ற வழக்கறிஞர் மற்றும் ஏராளமான தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை ஏற்று துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் பிரியா நடேஸ் தனது மகள்களுடன் பெர்த் மருத்துவமனையில் சந்திக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் செவ்வாய் அன்று இரவு நடேஸ் மற்றும் மூத்த மகள் கோபிகா முருகப்பன் ஆகியோர் பெர்த் குழந்தைகள் மருத்துவமனைக்கு வந்தடைந்தனர்.

Diaspora Tamil family Priya -met at Perth Children's Hospital,இந்நிலையில் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு குடும்பம் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது மருத்துவக் காரணங்களுக்காக மட்டுமே என்றும், இது அவர்கள் குடியேற்றத்திற்கான விசா வழங்கும் வழி அல்ல என்றும் குடியேற்ற அமைச்சர் Alex Hawke கூறியுள்ளார். சிறுமி தாருனிகா சிகிச்சை பெறும் வரை தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிரந்தர குடியேற்றத்திற்கு ஆக அனுமதி கேட்டு தொடரப்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இது குறித்து அரசு தற்போது முடிவெடுக்க முடியாது என்றும் குடியேற்ற அமைச்சர் Alex Hawke கூறியுள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து அதற்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை தொடருவோம் என்றும், அது தடை நீக்கப்படும் நடவடிக்கையா அல்லது குடியிருக்க அனுமதியா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிரியா நடேஸ் குடும்பம் சந்திக்க அனுமதி அளித்தமைக்கு பல்வேறு தரப்பினரும் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி மற்றும் தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் கோரிக்கையை கருத்தில் கொண்டு செயல்பட்டமைக்கு பிரதமர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

புகலிடக் கோரிக்கை முன்வைத்துள்ள குடும்பத்திற்கு இங்கேயே குடியேற்றம் செய்வதற்கான உரிமையை குடியேற்ற அமைச்சர் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

Link Source: https://bit.ly/3wuuZbJ