Breaking News

விக்டோரியா மாகாணத்தில் 25,000க்கும் அதிகமான வீடுகளில் மின் சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.

விக்டோரியா மாகாணத்தின் யல்லூரன் மின் உற்பத்தி நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் மூலம் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின் சேவை வழங்கப்படுகிறது.

இந்த மின்சேவை நிறுவனத்திற்கு தேவையான நிலக்கரி அருகில் உள்ள பிரவுன் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து அனுப்பப்படுகிறது.

The state government says more than 25,000 homes in Victoria have been cut off from electricityகடந்த வாரம் விக்டோரியாவை தாக்கிய புயலால் இந்த மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானம் சேதமடைந்ததாக மின் துறை அமைச்சர் லில்லி அம்பிரோசியோ தெரிவித்துள்ளார்.
மேலும் நிலக்கரி சுரங்கத்தில் உள்ளேயே பெரு வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். மின் வினியோக கட்டுமானமும் சேதமடைந்ததாக அமைச்சர் லில்லி தெரிவித்துள்ளார்.

இந்த வெள்ளத்தால் ஏற்பட்ட மின் தடையின் காரணமாக டாண்டியா, மான்பிளக், பெல்கிரேவ் போன்ற இடங்களில் மின் வினியோகம் கடுமையாக தடைபட்டுள்ளது.

இப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 25 ஆயிரம் குடியிருப்பு வாசிகள் இருளில் தவித்து வருகின்றனர்

The state government says more than 25,000 homes in Victoria have been cut off from electricity,.வெள்ளத்தால் ஏற்ப்பட்ட பாதிப்பில் இருந்து மீட்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இப்பகுதி மக்கள் அரசு மீது அதிருப்தியடைந்திருப்பதாக கலரோமா கேப்டன் பில் ராபின்சன் மத்திய அரசை விமர்சித்துள்ளார். திடீரென சுரங்கத்திற்குள்ளாக வெள்ளம் ஏற்பட்டதால் கணிக்கமுடியவில்லை என்று அமைச்சர் மின் துறை லில்லி தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த பேரிடர் மேலாண்மை அதிகாரி ஆண்ட்ரூ கிரிஸ்ப், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும் வரும் வாரத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
மக்கள் அவசர கால செயலியில் வரும் அறிவிப்புகளை தொடர்ந்து பின் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

The state government says more than 25,000 homes in Victoria have been cut off from electricity,அவசர கால நிவாரணமாக சுமார் 42 ஆயிரம் டாலர் நிவாரணத்தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும் அவர் மாகாண முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ தெரிவித்துள்ளார். புயலால் சுமார் 130 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், 5 நாட்களாக சுமார் 25000 குடியிருப்பு வாசிகள் இருளில் தவித்து வருகின்றனர்.

Link Source: https://ab.co/3gDFIcR