Breaking News

ஆஸ்திரேலியாவில் மகாராணியின் பிறந்தநாளையொட்டி அதிஉயர் விருதுக்கு டாக்டர் செல்வநாயகம் செல்வேந்திரா தேர்வு : மருத்துவம், கலை உள்ளிட்ட துறைகளில் தொடர் சாதனைக்காக அங்கீகாரம்

1974ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்த புலம்பெயர் தமிழரான டாக்டர் செல்வநாயகம் செல்வேந்திரன் சுமார் 60 ஆண்டு காலம் மருத்துவராக பல்வேறு சேவைகளையும், சாதனைகளையும் புரிந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பிறந்த செல்வநாயகம் அவரது தந்தையுடன் மலேசியாவில் இருந்து இங்கிலாந்தில் மருத்துவம் பயின்று அங்கேயே மருத்துவராகவும் பணியாற்றினார்.

பின்னர் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறினார். மனைவி, மகன்களுடன் வசித்து வருகிறார்.

மேலும் இசை, ஓவியம் உள்ளிட்ட துறைகளிலும் தீராத தாகம் கொண்டு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று இசைக்கருவிகளை இசைப்பது இவரின் திறமைகளில் ஒன்று. இதே போன்று அவரது மனைவியும் இசைத்துறையில் வல்லவராக இருந்து வருகிறார்.

இவரின் 60 ஆண்டுகால மருத்துவ சேவை மற்றும் ஏனைய கலைகளில் ஆற்றி வரும் சேவைக்காக மகாராணியின் பிறந்த நாளன்று டாக்டர். செல்வநாயகம் செல்வேந்திரா ஆஸ்திரேலியாவின் உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட உள்ளார்.

இது குறித்து டாக்டர் செல்வேந்திராவின் மனைவி சந்தானலட்சுமி கூறுகையில், இந்த விருது எப்போதோ கிடைத்திருக்க வேண்டிய ஒன்று என்றும், அவரின் சேவையை தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்கதாக கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து பிரபலமான பல்வேறு இசைக்கலைஞர்களை அழைத்து வந்து தமிழ் சமூகத்திற்காக ஏராளமான நிகழ்வுகளை தாங்கள் இருவரும் இணைந்து நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். முனைவர் பட்டம் பெற்றுள்ள சந்தானலட்சுமி ஏராளமான தமிழ் நூல்களையும் இயற்றியுள்ளார்.

Link Source: https://bit.ly/3q2Oqpp