Breaking News

ஆஸ்திரேலியாவில் சிரோஜ் புயலால் பாதிக்கப்பட்ட நார்த்ஹாம்டன் பகுதியில் இராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேற்கு ஆஸ்திரேலியாவின் kalbari, நார்த்ஹாம்டன் பகுதிகளில் சிரோஜ் புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயல் பாதிப்பினால் ஏற்பட்ட சேதங்களை சீரமைப்பதற்கும் மக்களை இந்த பாதிப்பில் இருந்து மீட்கவும் இராணுவத்தினர் அனுப்பப் பட்டுள்ளனர்.

கடற்கரை நகரான கல்பாரி மற்றும் அதை சுற்றி இருக்கக்கூடிய 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது .

Defense forces are involved in rescue operations in the Northampton area affected by Cyclone in Australia. 4மூன்றாம் வகையை சேர்ந்த இந்த புயல் கிராமங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் தற்போது அந்த புயல் வலுவிழந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை துணை ஆணையர் Graig பேசும்போது புயல் சேதம் எதிர்பார்த்ததைவிட மிகக்கடுமையாக ஏற்பட்டிருப்பதாகவும் இன்னும் பொதுமக்களிடம் இருந்து அவசர அழைப்புகள் வந்தவண்ணம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை ஆய்வு செய்து வருவதாகவும், அதற்கு பிறகு

Defense forces are involved in rescue operations in the Northampton area affected by Cyclone in Australia. 2சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார் .
Northampton பகுதியில் சுமார் 500 தீயணைப்புத் மற்றும் மீட்பு படையை சேர்ந்த வீரர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் ,47 பாதுகாப்பு படை வீரர்களும் இந்த பணியில் பங்கேற்று இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார் .

சில இடங்களில் மெல்ல மெல்ல தொலைத் தொடர்பு சேவைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.இதை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் நகரை சீரமைக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

உள்ளூர் கால்பந்தாட்ட கிளப்பை சேர்ந்த வீரர்களும் பாதுகாப்பு படை வீரர்களுக்கு உதவிகளை செய்யத் துவங்கியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அப்பகுதிவாசிகள் பலருடைய வீடுகளின் மேற்கூரைகள் காணாமல் போய்விட்டதாகவும் , வியாழக்கிழமை கூடுதலாக தன்னார்வலர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Defense forces are involved in rescue operations in the Northampton area affected by Cyclone in Australia. 1புயல் சேதங்கள் குறித்து கருத்து தெரிவித்த விவசாயி ஜெசிக்கா புயலால் ஏற்பட்ட சேத மதிப்பு பல ஆயிரம் டாலரை கடக்கும் என்றும் அதேநேரம் பொது மக்கள் மிகவும் ஆர்வமாக தங்களுக்கு உதவி செய்ய முன் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எல்லோரும் ஒற்றுமையாக புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு முயற்சி செய்தால் நிச்சயமாக இந்த பாதிப்பிலிருந்து நாம் மீண்டு வருவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
சுமார் 28500 வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் இன்னும் மின்வினியோகம் தொடங்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின் வினியோக நிறுவனமான வெஸ்டர்ன் பவர் அவசரகால ஜெனரேட்டரை இயக்குவதற்கும் தொடங்கியுள்ளது .
அது நேரம் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சீரமைக்க இன்னும் ஒரு சில வாரங்கள் ஆகலாம் என்றும் துணை ஆணையர் தெரிவித்துள்ளார் .

ஒரு சில சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் விநியோக மையங்கள், உணவகங்கள் மருந்தகங்களை, திறக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் தொலைபேசி சேவைகள் மெல்லமெல்ல சீரமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கல்பாரி நகரில் மட்டும் சுமார் 30 கட்டுமானங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பிலிருந்து முழுமையாக வெளிவர இன்னும் இரண்டு வருடங்கள் ஆகலாம் என்று கூறியுள்ளார்.