Breaking News

வாடிக்கையாளரின் சரக்கு பையில் உயிருள்ள பாம்பு இந்த விவகாரம் குறித்து ALDI சூப்பர் மார்க்கெட் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ALDI Supermarket has launched an investigation into the matter.

சிட்னியை சேர்ந்த பெண் ஒருவர் ஆல்டி பல்பொருள் அங்காடிக்கு பொருட்களை வாங்குவதற்காக சென்றுள்ளார் .

ALDI பல்பொருள் அங்காடியில் இருந்து இலை கோசுவையும் ( lettuce) வாங்கியவர் அதற்கு தேவையான பணத்தை செலுத்தி விட்டு அங்கிருந்து பொருட்களுடன் வீடு திரும்பியுள்ளார்.

ALDI Supermarket has launched an investigation into the matter. 1அந்த பெண்மணி வீட்டிற்கு திரும்பியவுடன், சூப்பர் மார்க்கெடில் இருந்து வாங்கி வந்த பொருட்களை அப்பெண்ணின் மகன் பார்த்துள்ளார். அப்போது அந்த பையில் இருந்த இலை கோசுவில் ஒரு சிறிய பாம்பு உயிருடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அந்த பெண் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் .

மேலும் இதுபோன்ற இலைக்கோசு வாங்கும்போது வாடிக்கையாளர்கள் அதனை கவனத்துடன் பார்க்க வேண்டும் என்றும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ALDI Supermarket has launched an investigation into the matter. 3இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆல்டி பல்பொருள் அங்காடி நிறுவனம் வாடிக்கையாளரின் பொருளில் பாம்பு சென்ற விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அதேநேரம் வனவிலங்கு தகவல் மற்றும் மீட்பு அமைப்புடன் இணைந்து இந்த பாம்பு எப்படி வாடிக்கையாளர் பைக்குள் வந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .
மேலும் இந்த பொருளை தங்கள் கடைக்கு விநியோகம் செய்த விற்பனையாளரிடமும் இது குறித்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குயின்ஸ்லாந்தில் இருக்கக்கூடிய Toowoomba என்ற வனப்பகுதிக்குள் இந்த பாம்பு விடப்படும் என்றும் அதேநேரம் இந்த பாம்பு கூச்ச சுபாவம் உடையது என்று வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. வழக்கமாக இந்த பாம்பு குயின்ஸ்லாந்து மற்றும் சவுத் வேல்ஸ் மாகாணத்தில் இருக்கக்கூடிய ஒன்றே என்றும் பெரும்பாலும் மரங்களில் வாழக் கூடியது என்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.