Breaking News

கோவிட் – 19 : ஆஸ்திரேலியாவிடம் இருந்து அமெரிக்கா கற்றுக்கொள்ள வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் என்ன? அந்தோனி ஃபவுசி உரை

கொரொனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் முக்கிய நாடான அமெரிக்கா வளர்ந்து வரும் நாடுகளில் கொரொனாவின் மோசமான பாதிப்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறது.

அந்த வகையில், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் கிர்பி கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், அமெரிக்காவின் பிரபல தொற்றுநோய் நிபுணர் அந்தோனி ஃபவுசி பங்கேற்று உரையாற்றினார்.

United States learn and avoid from Australiaஅப்போது பேசிய அவர், ஆஸ்திரேலியாவில் எல்லைகள் மூடல் மற்றும் ஊரடங்கு நடவடிக்கைகளை அமெரிக்காவின் நிலையற்ற நடவடிக்கைகளோடு ஒப்பிட்டார். இது வைரசை கட்டுக்குள் வைத்திருக்க பெருமளவு உதவியதாகவும் கூறினார்.

ஊரடங்கு காலத்தில் பின்பற்றும் ஒழுங்கு, அதற்கு மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு குறித்து தனது ஆஸ்ரேலிய நண்பர்களோடு வியப்போடு பகிர்ந்து கொண்டதாகவும் ஃபவுசி தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில், முழு ஊரடங்கு என்பது அனைவருக்கும் உற்சாகமான செய்தியல்ல என்று நம்புகிறேன். அதே நேரம், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மிகச் சீராகவும் பயனுள்ள வகையிலும் நடத்திக் காட்டினீர்கள் என அந்தோனி ஃபவுசி குறிப்பிட்டார்.

இதேபோன்று தடுப்பூசி விவகாரத்தில் அமெரிக்காவிடம் இருந்து ஆஸ்திரேலியா கற்றுக்கொள்ள வேண்டியவை குறித்தும் அவர் எடுத்துக் கூறினார்.

COVID-19அமெரிக்காவில் நாள்தோறும் மில்லியன் கணக்கில் தடுப்பூசி செலுத்தப்படுவதை குறிப்பிட்ட ஃபவுசி, முன்னாள் அதிபர் டிரம்ப் கொரானா விவகாரத்தில் உறுதியற்ற நிலையில் இருந்ததை ஏற்றுக் கொண்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் கம்யுனிடி தடுப்பூசி மையங்களை உருவாக்குதல், மருந்தகங்களில் தடுப்பூசி கிடைக்கச்செய்தல், மொபைல் யூனிட் மூலமாக தொடர்பு கொள்ள முடியாத நிலையில் எளிய மக்களுக்கும் தடுப்பூசி கிடைக்க செய்வது போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அதிபர் ஜோ பைடன் மேற்கொண்டதாக அந்தோனி ஃபவுசி கூறினார்.

ஓய்வு பெற்ற மருத்துவர்கள், ராணுவ வீரர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவர்கள் மூலம் அனைவருக்கும் கொரொனா தடுப்பூசியை கொண்டு சேர்க்க முடிந்தவரை அதிபர் பைடன் நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும், நாட்டு மக்களை காக்க அமெரிக்க இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருப்பதாகவும், தொடக்கத்திலேயே தடுப்பூசி போடும் நடவடிக்கையை ஆஸ்திரேலியா தொடங்கியதாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கு கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதாகவும் ஃபவுசி ஒப்புக்கொண்டுள்ளார்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை கண்டறிந்து உடனடியாக அங்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், வைரசின் வெவ்வேறு வடிவங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வந்து அச்சுறுத்தும் என்றும் தொற்று நோய் நிபுணர் அந்தோனி ஃபவுசி கூறியுள்ளார்.