Breaking News

சர்வதேச விண்வெளி மையத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாரால் சுமார் 45 நிமிடங்கள் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியில் இருந்து சுமார் 402 கிமீ தொலைவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க சீனா, ரஷ்யா என்று பல்வேறு நாடுகளின் பங்களிப்புடன் இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் இயங்கி வருகிறது.

இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் தங்கி வெண்வெளி வீரர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விண்வெளி ஆய்வு மையத்தில் கூடுதலாக சில ஆய்வறைகளை இணைப்பதற்கான முயற்சி கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்யாவின் கஜகஸ்தான் நாட்டின் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து 22 டன் எடையுள்ள Nauka என்ற ஆய்வறை ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது.

புதிதாக வந்த இந்த ஆய்வறையை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைக்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராத விதமாக இந்த ஆய்வறையில் இருந்த திரஸ்டர்ஸ் என்றழைக்கப்படும் உந்திகள், இயங்கியதால் விண்வெளி ஆய்வு மையம் அந்த சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிச்சென்றது.

NASA says telecommunications have been cut off for about 45 minutes due to a technical glitch at the International Space Station.இதனால் சுமார் 47 நிமிடங்களுக்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடனான தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள, விண்வெளி ஆய்வு திட்டத்தின் மேலாளர் Joel Montalbano, ஆய்வு மையத்துக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வு மையத்தில் இருந்த விண்வெளி வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நகர்வு ஏற்படும் போது எந்த மாற்றத்தையும் தங்களால் உணர முடியவில்லை என்று நாசாவின் பாதுகாப்பு அதிகாரி Kathy Lueders தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இந்த Nauka ஆய்வறையை கடந்த 2007 ஆம் ஆண்டே விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு தொழில் நுட்ப கோளாறால் இந்த முயற்சி 14 ஆண்டுகள்
தாமதத்துக்கு பிறகு வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3zPlNzI