Breaking News

ஆப்கானிஸ்தான் நாட்டினரை மனிதாபிமான அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்க முடிவு : பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல் உச்ச நிலையை எட்டியுள்ளது. படிப்படியாக பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வந்த தாலிபான் படையினர் ஆப்கன் தலைநகர் காபூலை கைப்பற்றி தங்கள் வசம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் ஒட்டுமொத்தமாக ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் வசம் வந்துள்ளது.

Decision to allow Afghans in Australia on humanitarian. Prime Minister Scott Morrison.அமெரிக்கா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து தாலிபான்கள் படிப்படியாக பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வந்தனர். படைகள் முழுவதுமாக திரும்பப் பெறப்பட்ட நிலையில் கண்மூடித்தனமாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வந்த தாலிபான் அமைப்பு அரசுக்கு எதிரான தங்களது நடவடிக்கையை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் நிலவிவரும் அமைதியற்ற சூழலை கருத்தில் கொண்டு அந்நாட்டைச் சேர்ந்த குடிமக்களை ஆஸ்திரேலியாவிற்கு மனிதாபிமான அடிப்படையில் அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நெருங்கிய நபர்களிடம் பேசி வருவதாகவும் அதற்கான திட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழல் மிகவும் நிலையற்ற தன்மையும், அபாயகரமானதாகவும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது அந் நாட்டு அரசாங்கத்திற்கு மிக மோசமான அவசர நிலை என்றும் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.

Decision to allow Afghans in Australia on humanitarian. Prime Minister Scott Morrison..400 பேர் இதுவரை மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலரை முகாமில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலிய படை வீரர்களுக்கும் பிரதமர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Link Source: shorturl.at/hwxL7