Breaking News

பள்ளி ஆசிரியர்களை அத்தியாவசிய பணியாளர்களாக கருத முடியாது என குயின்ஸ்லாந்து திட்டவட்டம் : நியூ சவுத் வேல்ஸ் எல்லையில் ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் நீடிக்கும் குழப்பம்

Queensland plan to stop school teachers from being essential staff. Prolonged confusion over teachers' detention at the New South Wales border

ஆஸ்திரேலியாவின் முக்கிய மாகாணங்களில் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது இந்நிலையில் பல்வேறு மாகாணங்களில் நகரப்பகுதி, ஊரகப் பகுதி உள்ளிட்ட இடங்களில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்காக மட்டுமே வெளியில் சென்றுவர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Queensland plan to stop school teachers from being essential staff. Prolonged confusion over teachers' detention at the New South Wales border..இந்நிலையில் குயின்ஸ்லாந்தில் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை அத்தியாவசிய பணியாளர்களாக கருதமுடியாது என்று கூறப்பட்டுள்ளது. Palm Beach-Currumbin மாகாண உயர் நிலைப் பள்ளியில் பணியாற்றும் 30 ஆசிரியர்கள் எல்லைக்கு அப்பால் இருந்து வருவதால் அவர்கள் நியூ சவுத் வேல்ஸ் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். பள்ளி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்களை அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இந்த சூழல் மாணவர்களுக்கு மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், புதிய ஆசிரியர்கள் வகுப்பு எடுக்கு சூழல் அவர்களுக்கு புதிதாக இருக்கும் என்றும் பள்ளி முதல்வர் Chris Capra கூறியுள்ளார்.

அதே நேரத்தில் 30 ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகள் நடத்துவது சிரமமான காரியம் என்பதால், நியூ சவுத் வேல்ஸ்-ல் வசிக்கும் 30 பேரை உடனடியாக பள்ளியில் பணியமர்த்தி கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து வகுப்புகளும் வார இறுதி நாட்களில் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அவர்களை மதிப்பீடுகள் செய்யப்படும் என்றும் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்கள் குறிப்பிட்ட சில காரணங்களுக்காக மட்டுமே அத்தியாவசிய பணியாளர்களாக நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், குழந்தைகள் பராமரிப்பாளர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணியாளர்களாக கருதப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Queensland plan to stop school teachers from being essential staff. Prolonged confusion over teachers' detention at the New South Wales border.இந்நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனை கருத்தில் கொண்டே இதுபோன்ற எல்லை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அது நிச்சயம் பலனளிக்கும் என்றும் கல்வித் துறை அமைச்சர் Grace Grace கூறியுள்ளார். தேவைப்பட்டால் ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலமாக பாடம் கற்பிக்கும் நிலையை ஊரடங்கு நாட்களில் தொடர்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாகாணத்தில் உள்ள பள்ளிகளுக்கு மான நடைமுறையில் மாற்றங்கள் ஏற்படலாம் தவிர மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் உரிய வழி முறைகள் பின்பற்றப் படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Link Source: shorturl.at/dlBWZ