Breaking News

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் ஒரே நாளில் 478 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தொற்று பரவல் வேகம் அச்சமூட்டுவதாக மாகாண பிரிமீயர் கிளாடிஸ் பெர்ஜியாக்களின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 478 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 7 பேரில் பெரும்லானவர்கள் 70 வயதை கடந்தவர்கள் என்றும் ஒருவர் 40 வயதுடையவர் என்றும் பிரிமீயர் பெர்ஜியாக்கிளின் தெரிவித்துள்ளார். ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.

மேலும் 15 வயது சிறுவன் ஒருவர் கொரோனா தொற்று மற்றும் pneumococcal meningitis பாதிப்பால் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பரவல் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்று சுகாதாரத்துறை அதிகாரி சாண்ட் தெரிவித்துள்ளார்.

அச்சத்திற்கு மத்தியில் வாழ்வது கடினம் என்றும் , இந்த பரவலை கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona infection has been confirmed in 478 people in a single day in the state of New South Wales. 7 people were died.தொற்று பரவலால் உயிரிழந்துள்ள பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்றும், கொரோனா சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்பை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று முதன்மை சுகாதார அதிகாரி கெர்ரி சாண்ட் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பெரும்பாலானவர்கள் கொரோனா , கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை என்றும், இதை கண்காணிக்கும் விதமாக ஆப்ரேஷன் ஸ்டே அட் ஹோம் என்ற பணியில் 21,000 காவலர்களும், ராணுவ வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக பிரிமீயர் பெர்ஜியாக்கிளின் தெரிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக 500 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், 120 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஆணையர் மிக் புல்லர் தெரிவித்துள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,56,495 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Link Source: shorturl.at/xABY3