Breaking News

D.N.A – கைரேகை வரை தனிநபர் தகவல்களை திருடும் பெரும் நிறுவனங்கள்.

ஆஸ்திரேலியாவின் பெருநிறுவனங்கள் சில பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் விவரங்களை சேகரித்து வருவதாக அந்நாட்டில் இயங்கும் நுகர்வோர் அமைப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

The Australian-based consumer organization has accused Australian corporations of using a variety of technologies to collect customer details

ஆஸ்திரேலியவில் இயங்கும் கே மார்ட், பன்னிங்க்ஸ், தி குட் கைய்ஸ் போன்றவை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனங்களாக உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் அங்க விவரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சாய்ஸ் (CHOICE).என்கிற நுகர்வோர் அமைப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

The Australian-based consumer organization has accused Australian corporations of using a variety of technologies to collect customer details,கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இவ்வமைப்பு சுமார் ஆயிரம் வாடிக்கையாளர்களிடம் தனிப்பட்ட ஆய்வை மேற்கொண்டது. இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விபரங்களை அவர்களுக்கு தெரியாமலேயே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருவது தெரியவந்துள்ளது. இது ஆஸ்திரேலியாவின் தனிநபர் உரிமை மீறல் நடவடிக்கையாகும். முகங்களை அடையாளம் காணுதல், கைரேகைகளை நகல் எடுத்தல், கண்களை ஸ்கேன் செய்தல் போன்ற செயல்களை பயன்படுத்தி குறிப்பிட்ட 3 நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரித்து வருகிறது.

அதிலும் கே மார்ட் என்கிற நிறுவனம் வாடிக்கையாளர்களின் கைரேகையை நகல் எடுக்கும் போது, அவர்களுடைய டி.என்.ஏ-வையும் சேகரிப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஒரு குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த உயிரியல் மூலக்கூறுகளும் அந்த நிறுவனத்துக்கு தெரியவருகிறது. இது முற்றிலும் பொருத்தமற்றது மற்றும் தேவையற்றது என சாய்ஸ் தெரிவித்துள்ளது.

The Australian-based consumer organization has accused Australian corporations of using a variety of technologies to collect customer details.ஆனால் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கு பன்னிங்க்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களுடைய பாதுகாப்புகாக மட்டுமே வாடிக்கையாளர்களின் முகங்களை அடையாளம் காணும் கருவி விற்பனையகங்களில் பொருத்தப்பட்டுள்ளது. ஒரு தனிநபரோ அல்லது குழுவோர் தவறான செயல்களில் ஈடுபட்டால், அவர்களை ஆடையாளம் காண்பதற்கு மட்டுமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்று விளக்கம் அளித்துள்ளது. இதற்கிடையில் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை ஆஸ்திரேலிய அரசிடம் அளிக்க சாயிஸ் அமைப்பு முனைந்து வருகிறது. தற்போதைய தொழிலாளர் கட்சி தனிநபர் உரிமை மற்றும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக உள்ளது. அதனால் குறிப்பிட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் மீது நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.