Breaking News

யூரோ 2020 போட்டியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஒற்றை மூவ் : 5 பில்லியன் டாலர் சரிவை சந்தித்த கோகோ கோலா நிறுவனம்

Cristiano Ronaldo's single move at Euro 2020 press conference, Coca-Cola company collapses to $ 5 billion

போர்ச்சுக்கல் நாட்டின் பிரபல கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ UEFA யூரோ 2020 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். புதாபெஸ்ட்- ல் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் குரூப் F பிரிவில் ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வழக்கமான செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பங்கேற்றார்.

Cristiano Ronaldo's single move at Euro 2020 press conference. Coca-Cola company collapses to $ 5 billionசெய்தியாளர் சந்திப்பு காக அவர் வந்து அமரும் போது மேடையில் இரண்டு கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றை எடுத்து ஓரமாக வைத்த ரொனால்டோ அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து மேலே உயர்த்தி காட்டி தண்ணீர் குடியுங்கள் என்று கூறினார். ரொனால்டோவின் இந்த செயல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோவை கோடிக்கணக்கானோர் பகிரத் தொடங்கினர்.

பரவலாக தனது ரசிகர்களை கொண்டுள்ள ரொனால்டோவின் செயல் காரணமாக கோகோ கோலா நிறுவனம் சந்தைகளில் கடும் வீழ்ச்சியை கண்டது. 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்களில் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வீழ்ந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.6 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்ட நிலையில் அது வர்த்தகம் நிறைவடையும் வரை இல்லாத நிலையிலேயே தொடர்ந்தது. விளையாட்டு வீரரின் ஒரு சாதாரண செயலால் குளிர்பான நிறுவனம் ஒரே நாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்தது பெரும் பேசுபொருள் ஆனது.

Cristiano Ronaldo's single move at Euro 2020 press conferenceஇந்நிலையில் ரொனால்டோவின் செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள கோகோ-கோலா நிறுவனம், ஒவ்வொருவரும் எதைக் குடிக்க வேண்டும் என்ற முடிவை அவர்கள் தான் எடுக்க வேண்டும் என்றும் அவர் அவருக்கு தனித்தனி சுவையும், இவையும் உண்டு என்று தெரிவித்துள்ளது. இதனிடையே போர்ச்சுக்கல் ஹங்கேரி அணிக்கு இடையே நடைபெற்ற போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் 3 க்கு 0 என்ற கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.

Link Source: https://ab.co/3xrnIt9