Breaking News

நியூ சவுத் வேல்ஸில் கொரோனா பாதிக்கப்படும் பகுதிகளின் பட்டியல் வெளியீடு: குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை நடவடிக்கை

Release of Corona Affected Areas in New South Wales, Queensland Health Activity

புதன்கிழமை மாலை சிட்னியின் கிழக்கு ஊரகப் பகுதியில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை பல்வேறு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்பு சங்கிலி கிடைக்காத தொற்று பரவல் காரணமாக சுகாதாரத் துறைக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் தொற்று பாதிக்கப்பட்ட நபர்கள் சென்று வந்த இடங்களின் விவரங்கள் மற்றும் நேரங்கள் தொடர்பான விரிவான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு சென்று வந்த நபர்கள் உடனடியாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் குயின்ஸ்லாந்து தலைமை சுகாதார அதிகாரி Jeannette Young கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது நியூ சவுத் வேல்ஸ் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், அதே நேரத்தில் நியூ சவுத் வேல்ஸ் சென்றுவந்து குயின்ஸ்லாந்தில் உள்ள அனைவரும் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று வந்திருந்தால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் தற்போது வரை பாதிப்புக்கு உள்ளாகும் இடங்களின் பட்டியல் மற்றும் நேரம் தொடர்பான விரிவான பட்டியலை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் பெரும்பாலும் மோட்டல், காபி ஹவுஸ், பெட்ரோல் நிலையங்கள், கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், துணிக்கடைகள் முக்கிய சந்திப்புகளில் உள்ள கஃபேக்கள் ஆகியவற்றின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு அந்த நேரத்தில் சென்று வந்த நபர்கள், இருக்கும் இடங்களிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தாமல் தனிநபர் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் குயின்ஸ்லாந்து சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Link Source: https://ab.co/2TINGJS