Breaking News

மெல்போர்னில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் : பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் கிடைக்க மூன்று வாரங்களாகும் என தகவல்

Damage caused by heavy rains in Melbourne. Information that it will take three weeks for electricity to be available in most areas

மெல்போர்ன், ஆரஞ்ச், டிரால்கன், டேன்டெனோங் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழையால் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்டு உள்ள மின்சாரம் மீண்டும் கிடைப்பதற்கு மூன்று வார காலம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. சற்று ஏறக்குறைய ஜூலை 10ஆம் தேதி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருக்கும் என்றும் மீட்புப் பணிகள் முழுமையாக நடைபெற்ற பின்னரே மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Damage caused by heavy rains in Melbourne, Information that it will take three weeks for electricity to be available in most areasபலத்த காற்றுடன் கூடிய கன மழையால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து கூரைகள் பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. முக்கியமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து பெருமளவு தடைபட்டுள்ளது. ஊரகப் பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. டென்டோனாங் பகுதியில் குடியிருப்புவாசிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் AusNet தெரிவித்துள்ளது. மேலும் பாதிப்பு விவரங்கள் மீட்பு நடவடிக்கைகள் மின்சாரம் திரும்ப கிடைக்கும் தகவல்கள் உள்ளிட்டவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசரத் தேவையாக குடிநீர் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தகவல் தொடர்பிலும் பெருமளவு தேக்கம் ஏற்பட்டுள்ளது கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மின்சார துண்டிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட பகுதிகளில் தகவல் தொடர்பு பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மெல்போர்ன் இங்கிலாந்து பகுதியில் கடுமையான மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 2 பேர் உயிரிழந்தனர். இதனிடையே, மழை வெள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்த அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3iPp1hs