Breaking News

நான் யாரையும் குறை கூறவில்லை- பிரதமர் வருத்தம் !

I am not criticizing anyone says Prime Minister australia

ஆண்கள் எந்த ஒரு விஷயத்தையும் முதலில் சரியாக புரிந்து கொள்வதில்லை என்று துன்புறுத்தல் தொடர்பான செய்தியை தவறாக கையாண்டபிறகு, பின்னர் மன்னிப்பு கோரும் விதத்தில் இந்த தகவலை Prime Minister Scott Morrison தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் பணிபுரியும் இடத்தில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்ற கேள்விக்கு தான் அளித்த உணர்ச்சியற்ற பதிலுக்கு தன்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதாக கூறினார். மேலும் பெண்களின் வளர்ச்சிக்கு முயற்சி கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

கழிப்பறையில் தாக்கப்பட்ட ஒரு பெண்ணினை பற்றிய புகாரை ஒரு தனியார் நிறுவனம் கையாண்டு வருவதாக பிரதமர் கூறிய நிலையில், அந்நிறுவனம் தடுமாற்றத்தை சந்தித்தது. பின்னர் எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்தது.

இந்த தவறான தன்னுடைய பேச்சால் அந்த நிறுவனத்தில் உள்ள பாதிக்கப்பட்ட நபரிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், இந்த பிரச்சனையை அவர்கள் அனுமதி இல்லாமல் எழுப்ப தனக்கு உரிமையில்லை என்றும் Scott Morrison கூறினார். மேலும் தான் யாரையும் குறை கூறவில்லை என்றும் கூறினார்.

Greens leader Adam Bandt கூறுகையில், பிரதமர் ஏன் இவ்வாறு மக்களிடம் நடக்காத ஒன்றை கூறினார் என்பதற்கு பாராளுமன்றத்தில் பதில் கூற வேண்டும் என்றார்.

Labor's government accountability spokesperson Kristina KeneallyLabor’s government accountability spokesperson Kristina Keneally கூறுகையில், பெண்களை கையாளும் திறனை தவறாக பிரதமர் கூறியுள்ளார். யாருக்கும் இதை கூற அதிகாரம் இல்லை. பிரதமர் கூறியதில் எனக்கு விருப்பம் இல்லை. அவர் என்ன செய்ய போகிறார் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார்.