Breaking News

கோவிட் 19 : விக்டோரியாவில் ஊரடங்கின் இரண்டாவது நாளில் அதிகரித்த தொற்றுப் பரவல் : தொடர்பில் இருந்த மேலும் 19 பேருக்கு வைரஸ் பாதிப்பு

விக்டோரியாவில் தொற்றுப் பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கின் இரண்டாவது நாளில் ஏற்கனவே தொற்று பாதித்தவர்களின் தொடர்பில் இருந்த 19 பேருக்கு சமூக பரவல் ஊடாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Covid 19 Increased outbreak on second day of curfew in Victoriaடெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்ட 54 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 47 ஆயிரத்து 606 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விக்டோரியா தலைமை சுகாதார அதிகாரி Brett Sutton தெரிவித்துள்ளார். மேலும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Docklands மற்றும் Philip தீவில் உள்ள சில சுற்றுலா பகுதிகள் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. யூரோ கோப்பை இறுதிப் போட்டியின்போது பார்களில் இருந்தவர்களை தொடர்பு பட்டியலில் இணைத்து சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார்.

நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் ஆக இதுவரை பத்தாயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் யாருக்கேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Covid 19 Increased outbreak on second day of curfew in Victoria.நியூசவுத் வேல்ஸ் மாகாணத்திலிருந்து கோவிட் தொற்றுடன் மெல்பர்ன் வந்த removalists ஊடாகவும் சிட்னியிலிருந்து மெல்பர்ன் திரும்பிய குடும்பம் மூலமாகவும் ஆரம்பித்த கோவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடன் 5 நாட்களுக்கு விக்டோரியாவில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இருமலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத் துறையும் அரசும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அதே நேரத்தில் புதிய வகை வைரஸ் பரவும் வேகம் அதிகமாக இருப்பதால் தொற்று பரவல் தொடர்பில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களை பின்தொடர்வது சவாலான பணியாக இருப்பதாகவும் தலைமை சுகாதார அதிகாரி Foley தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3hL0vgC