Breaking News

அமெரிக்காவில் பேஸ்பால் விளையாட்டு மைதானத்தில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதால் ரசிகர்கள் பீதியில் உறைந்தனர்

Fan freeze in panic as they heard gunshots at a baseball stadium in the United States.

வாஷிங்டனில் உள்ள தேசிய விளையாட்டு மைதானத்தில் சாண்டியாகோ பேட்ரஸ் மற்றும் வாஷிங்டன் நேஷனல் ஆகிய இரு அணிகளுக்கிடையே பேஸ்பால் போட்டி நடைபெற்று வந்தது.

இந்தப் போட்டியை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அரங்கத்திற்குள் கூடியிருந்தனர்.

அப்போது அரங்கத்திற்கு உள்ளே ரசிகர்கள் கூடி இருந்த பகுதியில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டுள்ளது.

தொடக்கத்தில் துப்பாக்கிச்சூடு எங்கே நடத்தப்பட்டது என்பது உறுதியாக தெரியாததால் அங்கே அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பீதியில் உறைந்து நாற்காலிக்கு கீழே பதுங்கிக்கொண்டனர்.

Fan freeze in panic as they heard gunshots at a baseball stadium in the United States,சிலர் தரையோடு தரையாக படுத்துகொண்டனர். போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு உள்ளே பதிவுசெய்யப்பட்ட காட்சிகளில் துப்பாக்கிச்சூடு சப்தம் தெளிவாக கேட்க முடிகிறது. சிறிது நேரத்திற்குப் பின்னதாக துப்பாக்கிச்சூடு அரங்கத்திற்கு வெளியே நடந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பான வெளியிடப்பட்ட திரை அறிவிப்பில் துப்பாக்கிச் சூடு அரங்கத்திற்கு வெளியே நடைபெற்றதாகவும், ரசிகர்கள் உள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மெட்ரோபாலிட்டன் நகர காவல்துறை துணை தலைவர் ஆஷன் பெனிடிக்ட், துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும், விளையாட்டு போட்டியை காண வந்த ரசிகை ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fan freeze in panic as they heard gunshots at a baseball stadium in the United States,.இவருக்கு லேசான காயம் ஏற்பட்டிருப்பதால் உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்ற இருவரும் யார் இதற்காக அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் என்பது போன்ற விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக பெணிடிக்ட் தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் இரண்டு கார்களில் இருந்தவர்களுக்கிடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது தெரியவந்துள்ளது .

Fan freeze in panic as they heard gunshots at a baseball stadium in the United States..அவர்கள் யார் எதற்காக சுட்டுக் கொண்டார்கள் என்பது போன்ற விவரங்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பார்வையாளர்களில் ஒருவரான அருணன் ராம்நாத் தன்னுடைய நண்பர்களோடு இந்த விளையாட்டுப் போட்டியை காண வந்ததாகவும் துப்பாக்கிச்சூடு சத்தத்தால் தாங்கள் பீதியில் உறைந்ததாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

சிறிது நேரத்திற்கு பிறகு காவல்துறையினரின் பாதுகாப்புடன் மைதானத்திலிருந்து ரசிகர்கள் பாதுகாப்பான வழியில் வெளியேற்றப்பட்டனர் சுமார் 12க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்களும் ஆம்புலன்ஸ் நின்றிருப்பதை ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட விளையாட்டுப் போட்டியானது வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நடைபெறும் என்று போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3zhG1lD