Breaking News

கோவிட் பாதிப்பு இருப்பது தெரிந்தும் சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்ட 3 நபர்கள் : தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையின் கீழ் காவல்துறை நடவடிக்கை

3 persons who travelled from Sydney to various parts of the state of New South Wales knowing the presence of Covid infection. Police action under the Prevention of Infectious Disease Control

சிட்னியில் இருந்து மத்திய மேற்கு மாகாணங்களுக்கு பயணம் மேற்கொண்ட மூன்று நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களுக்கு புதிய வகை டெல்டா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிந்தும், அவர்கள் முடக்கநிலை காலத்தில் பயணம் மேற்கொண்டு இருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Removalist குழுவைச் சேர்ந்தவர்கள் சிட்னியிலிருந்து நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திற்கும் அங்கிருந்து மெல்போர்ன் உள்ளிட்ட இடங்களுக்கும் அதிக அளவில் சென்று வந்ததால் இவர்கள் மூலம் தொற்று பரவல் அதிகரித்திருப்பதாக சுகாதாரத்துறை அறிக்கை அளித்திருந்தது. இதனடிப்படையில் தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும் பயணம் மேற்கொண்ட 162 பேர் மீது தடுப்பு நடவடிக்கைகளை மீறியதாக காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

3 persons who travelled from Sydney to various parts of the state of New South Wales knowing the presence of Covid infection Police action under the Prevention of Infectious Disease Control.West Hoxton பகுதியிலிருந்து சிட்னியில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Molong பகுதிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளனர். அவர்களில் 3 பேர் முறையே 49, 27, 21 வயதுடைய ஆண்கள். மூவரும் Removalist குழுவில் பணியாற்றி வருவது கண்டறியப்பட்டது. மேலும் அவர்களுக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது இதனை அடுத்து ஊரடங்கு அமலில் இருக்கும் இடங்களில் அவசரகால பயணத்தின் அடிப்படையில் பயணம் மேற்கொண்டதால் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டதாக காவல்துறை அமைச்சர் David Elliott கூறியுள்ளார்.

புதிய வகை டெல்டா வைரஸ் மிக அதிகமாக பரவி வருவதாகவும் இதன் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் அவற்றை மீறும் வகையில் செயல்படும் நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்காது என்றும் காவல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவசரகால பயணங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விதிகளை மீறுவோர் மீது எந்தவித தயக்கமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

3 persons who travelled from Sydney to various parts of the state of New South Wales knowing the presence of Covid infection, Police action under the Prevention of Infectious Disease ControlGreater சிட்னி மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட மூன்று நபர்கள் வந்து சென்ற இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவை தொற்று பரவும் அபாயம் உள்ள இடங்களாக அறிவிக்கப்படும் என்று காவல்துறை துணை ஆணையர் Gary Worboys கூறியுள்ளார்.

தொற்று பரவாமல் தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகளை அரசு ஒருபுறம் மேற்கொண்டுவரும் நிலையில், இது போன்ற சிறிய குழுக்களால் தொற்று பரவும் அபாயம் அதிகரிப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

குறிப்பிட்டு பகுதிகளிலிருந்து பயணம் மேற்கொள்வதற்கான தடையை அதிகரிப்பதன் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியும் என்றும் காவல்துறை அரசுக்கு ஆலோசனைகளை கூறியுள்ளது.

Link Source: https://ab.co/3zgDXu7