Breaking News

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் நீண்டகால பாதிப்பு : கடந்த ஆண்டு தொற்று பாதித்த 3 ஆயிரம் பேருக்கு தொடரும் அறிகுறிகள்

பல்வேறு நாடுகளில் இரண்டு அலைகளாக பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திய தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. அந்த வகையில் பல்வேறு நாடுகளில் புதிய வகை வைரஸின் தாக்கம் தீவிரமடைய தொடங்கியுள்ளது. அதே நேரத்தில் நீண்ட கால தொற்று பாதிப்பால் பலர் பாதிக்கப்பட்டு இன்னும் சிகிச்சையில் இருக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் ஆஸ்திரேலியாவில் தொற்று பரவலின் தொடக்கத்தில் 30000 பேர் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் மூலமாகவும் சிகிச்சை காரணமாகவும் தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பின்னர் மூன்று மாதங்கள் ஒரு மாதம் கழித்து அறிகுறிகள் தென்படுவதும், பாதிப்பு அதிகரிப்பதும் பலருக்கு இருந்து வந்தது. இதை கொரோனா வைரஸின் நீண்ட கால பாதிப்பு என்று மருத்துவர்கள் குறிப்பிட்டு வந்தனர்.

corona virus in Australia. persistent symptoms in 3,000 people infected last year.நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் மூன்று மாத காலத்திற்கு பின்னர் இன்னும் தொற்று பாதிப்பின் அறிகுறிகள் தொடர்வதாக தெரியவந்துள்ளது. சான்பிரான்சிஸ்கோவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெண் Julie Trell தற்போது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு அறிகுறிகளை உணர்ந்துள்ளதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உடல் சோர்வு, பசி அதிகரித்தல், உணவு குறைவாக எடுத்துக் கொள்ளும் சூழல் என முதன்மை அறிகுறிகளைத் தாண்டி பல்வேறு பக்கவிளைவுகளும் தொடர்ந்து நீடிப்பதாக பாதிப்புக்கு உள்ளான நபர்கள் மருத்துவ ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

corona virus in Australia. persistent symptoms in 3,000 people infected last year,.நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் மக்கள்தொகை கட்டுப்பாடு அமைப்பு தொடர்ந்து நடத்தி வரும் ஆய்வில் நீண்டகால பாதிப்புக்கு ஆளாகும் நபர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரை தொடர் பாதிப்புக்கு ஆளானவர்கள் என்றும் அவர்களுக்கு இன்னும் அறிகுறிகளின் மிச்சம் தொடர்வதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுபோன்ற பாதிப்புக்கு உள்ளாகும் நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை செய்யும் மனநல ஆலோசனையும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் ஆராய்ச்சிக் குழுவில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3vXqJjR