Breaking News

நியூட்ரினோ, எட்டு வழி சாலை கூடங்குளம், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்துப் போராடிய நபர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் : முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவிப்பு

தமிழகத்தில் மத்திய, மாநில அரசால் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. இதேபோன்று சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியின்போது பெரிய அளவில் அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியும் சிலர் கைதாகினர். மக்களுக்கு எதிரான திட்டங்கள் எதையும் செயல்படுத்த விடமாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது முகஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதேநேரம் மக்களுக்கு எதிரான நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் எட்டு வழி சாலை உள்ளிட்ட திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Cases filed against those who opposed projects including neutrino, eight-lane road Kudankulam, hydrocarbons withdrawn. Chief Minister MK Stalin's announcement in the legislature.இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் குறிப்பிட்ட அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்ற அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதனையடுத்து சேலத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நபர்கள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திமுக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை கூட்டமும் நடைபெற்றது எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை எதிர்கொள்வது செய்ய வேண்டிய பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மறைந்த முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவு இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினர்.

Link Source: https://bit.ly/3zQW5f0