Breaking News

சிட்னியில் கொரோனா ஊரடங்கு பலன் தரவில்லை : Bondi தொடர்பு மூலம் மேலும் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு

Corona curfew in Sydney does not work. further increase in infection through Bondi contact

நியூ சவுத் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் போடப்பட்ட ஊரடங்கு எந்தவிதமான பலனையும் தரவில்லை என்றும், கொரோனாவை முறியடிக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்காமல் வியாழனன்று ஒரு நாளில் மட்டும் 11 பேருக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில் மூன்று நாட்கள் போடப்பட்ட ஊரடங்கு எந்தவிதத்திலும் பலனை தராது என்றும் ஒரு குறிப்பிட்ட இடம் தொடரவும் மையமாக மாறி விட்ட பின்னர் அங்கிருந்து தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகிறது என்றும் நியூ சவுத் வேல்ஸ் தலைமை சுகாதார அதிகாரி Kerry Chant கூறியுள்ளார்.

Corona curfew in Sydney does not work. further increase in infection through Bondi contact.மற்ற மாகாணங்களின் தலைநகரங்களில் போடப்பட்ட ஊரடங்கு ஓரளவுக்கு பலனைத் தந்தாலும் சிட்னியில் அது பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். அதே போன்று மற்ற மாகாணங்களில் தோற்று பரவல் தொடர்பை கண்காணிக்க போதுமான அளவுக்கு ஆராய்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் பரவல் சங்கிலியை உடைக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக டாக்டர் Kerry Chant கூறியுள்ளார்.

ஆனால் தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தொடர்பு சங்கிலியை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கிறிஸ்துமஸுக்கு பிறகாக சிட்னியில் ஊரடங்கு போடப்படாத நிலையில் மேற்கு பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. அந்தப் பகுதிகள் தற்போது வரை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாகவே அறியப்படுகின்றன.

மெல்போர்ன், பிரிஸ்பேன், பெர்த் உள்ளிட்ட பகுதிகளில் உடனடியாக முடிவு எடுக்கப்பட்டு ஊரடங்கு போடப்பட்டு அதன் பலனாக தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததாகவும் டாக்டர் Kerry Chant குறிப்பிட்டுள்ளார்.

Dr Chughtai.இதனிடையே புதிய வகை வைரஸ் தான டெல்டா வகை வைரஸ் தற்போது அதிக அளவில் பரவி வருவதால் தடுப்பூசி நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது மிக அவசியமானது என்றும், அதன் அடிப்படையிலேயே நாம் ஊரடங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் Abrar Chughtai, 10 சதவீதத்திற்கும் குறைவான ஆஸ்திரேலியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகவும், இதனிடையே புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி நடவடிக்கையை தீவிரப்படுத்தி பின்பே நாம் மக்களை வீட்டிலேயே இருக்கச் செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடியும் என்றும் டாக்டர் Abrar Chughtai தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் தற்போது பலமடங்கு வேகத்துடன் பரவத் தொடங்கி இருப்பது கவலை அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Link Source: https://ab.co/3w2aXEs