Breaking News

ஆஸ்திரேலியாவில் முதியோர் பராமரிப்பாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் போடப்படவேண்டும் : சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt திட்டவட்டம்

Corona vaccine should be made mandatory for elderly caregivers in Australia. Health Minister Greg Hunt

சமீபத்தில் மெல்போர்னில் Arcare Maidstone முதியோர் பராமரிப்பு மையத்தில் பணியாற்றிய பெண் ஊழியருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு யார் மூலமாக தொற்று பாதித்தது என்பதை உறுதி செய்ய முடியாத அளவுக்கு தொடர்பு சங்கிலி இல்லாமல் போனது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.

Corona vaccine should be made mandatory for elderly caregivers in Australia, Health Minister Greg Huntஇந்நிலையில் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை படி முதியோர் பராமரிப்பு மையங்களில் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்துள்ளார். மேலும் தோற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்து மையங்களுக்கும் அறிவுறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Arcare Maidstone மையத்தில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் Greg Hunt ஆகியோர் மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆலோசனை நடத்தினர் இதனை அடுத்து தடுப்பூசி நடவடிக்கைகள் கட்டாயம் ஆக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக முன்னரே ஆலோசனை நடத்தப்பட்டதாக ஆனால் பாதிப்புக்கு அதிகம் ஆளாகுவோர் வயதானவர்களாக இருந்ததால் அது தள்ளிப் போடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Corona vaccine should be made mandatory for elderly caregivers in Australia,. Health Minister Greg Huntதனது தாயை இழந்த மகன் ஒருவன் தடுப்பூசி விவகாரத்தில் முதியோர்களை உரிய கவனத்தில் கொண்டு மத்திய அரசு செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மேலும் பாதிக்கப் படக் கூடியவர்கள் என்ற பட்டியலில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய அமைச்சரவை கூட்டத்தின் ஒப்புதலுக்கு பின்னர் உடனடியாக நாட்டில் உள்ள அனைத்து முதியோர் பாதுகாப்பு மையங்கள் வீடுகளில் தனியாக முதியோர்களை கவனித்து வருவோர் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும் என்று சுகாதாரத்துறை தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதியோர்களை பராமரித்து வரும் இளம் வயதினர் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருப்பதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்கள் நலனோடு தாங்கள் பராமரிக்கும் முதியோர்களின் நலனும் முக்கியம் என்பதால் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே தொடர்பு சங்கிலி இன்றி தோற்று பாதிக்கப்பட்ட முதியோர் பராமரிப்பு மைய பெண் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரோடு தொடர்புடைய நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளனர். இதனை அடுத்து தற்போது அனைத்து முதியோர் பராமரிப்பு மைய பணியாளர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/2TtvDY9