Breaking News

சீனாவில் பிறப்பு சதவீதம் சரிவடைவதால், மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள ஜி ஜின்பிங் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

As the birth rate in China is declining, Xi Jinping's cabinet has given permission to have up to three children.

உலகில் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடாக சீனா உள்ளது. இந்நாட்டில் 140 கோடிக்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் சீனாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. அதன்படி தற்போது மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

இதன்படி 2050 ஆண்டில் சீனாவில் 3 ல் 2 பேர் முதியவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய மனித வளம் மிக்க நாடாக திகழும் சீனாவுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் 2015 ஆண்டு வரை மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தைகள் மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இரு குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்காது என்று அரசு அறிவித்திருந்தது.

2015ல் அந்த கொள்கையை மாற்றிய சீன அரசாங்கம் ஒரு குடும்பத்தில் இரு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது.

ஆனால் இந்த அறிவிப்புக்கு மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என்று தற்போதைய மக்கள் தொகை கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

ஏனெனில் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் சுமார் 1.3% ஆக உள்ளது. இந்த 1950 ஆண்டுக்கு பிறகு காணப்படும் மிகக்குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி சதவீதமாகும்.

As the birth rate in China is declining, Xi Jinping's cabinet has given permission to have up to three childrenஅதிகரிக்கும் முதியோர்களின் எண்ணிக்கையை சமாளிக்க 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கியுள்ள சீன அரசு, அவ்வாறு பெற்றுக்கொள்பவர்களின் குடும்பத்திற்கு நகர்புறங்களில் வீட்டு வசதி, அரசு பள்ளியில் படிக்க முன்னுரிமை, மற்றும் ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனா தன்னுடைய மனித வளம் குறைவதை தவிர்க்கும் விதத்தில் இந்த அறிவிப்பை வளியிட்டுள்ளது.

சீன அரசின் இந்த அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டாலும், சீன சமூக ஊடகங்களில் இதனை நகைச்சுவையாக விமர்சித்து வருகின்றனர்.
தனக்கு 5 லட்சம் யுவான்களை கொடுத்தால் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயார் என்று நகைச்சுவையாக ஒரு பெண் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் குழந்தை வளர்ப்பதற்கு ஏற்படும் செலவுகள் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்வதில் இருந்து பெற்றோர்களை பின்வாங்கச் செய்வதாக சமூக ஆர்வலர் Yifei Li, தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்பு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக Su Meizhen, தெரிவித்துள்ளார். இல்லையெனில் தான் $26,412 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் ,தற்போது அரசின் ஒப்புதலுடன் சலுகையும் கிடைப்பதால் மூன்றாம் குழந்தையை பெற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/34ByBMM