Breaking News

ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டு வருகிறது : ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குற்றச்சாட்டு

China is plotting to divide Australia and New Zealand. Australian PM Scott Morrison

அரசுமுறைப் பயணமாக நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ஸ்காட் மோரிசன் அங்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உடன் ஆலோசனை நடத்தினார். குறவன் ஒரு தொற்று காரணமாக எல்லைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை திறக்கப்பட்ட பின் வெளிநாட்டுக்கு முதன்முறையாக பிரதமர் மோரிசன் பயணம் மேற்கொண்டார். அந்த வகையில் நியூசிலாந்தின் குயின்ஸ் டவுனில் அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பல்வேறு விவகாரங்கள் தொடர்பான ஆலோசனையின் போது சீனாவின் மனித உரிமை மீறல் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பீஜிங்கில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் கண்டனத்திற்கு உரியது என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் நியூசிலாந்து 5 கண்களோடு தன்னுடைய புலனாய்வு பிரிவை கண்காணிக்க வைத்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பாகவே இரு நாட்டு தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அது முக்கியமானது அல்ல என்றும் இருநாட்டு உறவுகள், கொள்கைகள், பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் நிலைப்பாடுகள் குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப்பட்டதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.

China is plotting to divide Australia and New Zealand. Australian PM Scott Morrison.இதனிடையே ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நியூசிலாந்துக்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். சீனாவின் இந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றும் இருநாடுகளும் பாதுகாப்பு விவகாரத்தில் உறுதியுடன் இருப்பதாகவும் மோரிசன் குறிப்பிட்டார்.

வர்த்தகம், மனித உரிமை, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இரு நாடுகளும் ஒரே நேர்கோட்டில் நின்று சீனாவை எதிர்கொள்ளும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் சர்வதேச சமூகம் ஒரு பிரச்சனையில் இருந்து தங்கள் நாட்டை பாதுகாத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டு மக்களின் உடல்நலனில் கவனம் செலுத்தி அவர்களை தொற்று பாதிப்பிலிருந்து மீட்பதே தற்போதைய முக்கிய தேவை என்றும், அதற்குப் பிறகு இரு நாடுகளும் இணைந்து சர்வதேச அளவிலான பாதுகாப்பு நெறிமுறைகளை வகுத்து அதனடிப்படையில் சீனாவை எதிர்கொள்வோம் என்று இரு நாட்டு பிரதமர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3vSBNj7