Breaking News

ஆஸ்திரேலியாவில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 84 பேர் பலி : விக்டோரியா மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியது அரசு

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 84 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களில் 6 பேர் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். விக்டோரியாவில் 36 பேரும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 31 பேரும் கோவிட் தொற்றால் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் பல்வேறு மாகாணங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்டுவோரின் எண்ணிக்கை சராசரியாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Corona outbreak kills 84 in one day in Australia. Government approved elective surgery in Victoriaநியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தற்போது மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 494 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் 160 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விக்டோரியாவில் 707 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 79 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விக்டோரியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை மாகாண அரசு வழங்கி உத்தரவிட்டுள்ளது.

காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்திருந்த நிலையில் தற்போது இந்த அறுவை சிகிச்சைகளை மேற் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 1.4 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக மருத்துவமனைகள் 50 சதவீதம் அளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் தொற்று பாதிப்பு மருத்துவ கட்டமைப்பின் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாகவும் இதன் தாக்கத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் Martin Foley கூறியுள்ளார்.

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் தொற்று பாதிப்பு சராசரியாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 10 ஆயிரத்து 698 பேருக்கும், விக்டோரியாவில் 11ஆயிரத்து 240 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3B3nmvF