Breaking News

கொரோனா பரவல்- மோசமான கட்டத்தில் ஆஸ்திரேலியா..!!

கொரோனா பரவலால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் ஆஸ்திரேலியா, உலகளவில் வைரஸ் தொற்றால் அதிகமானோர் உயிரிழிக்கும் நாடுகளுக்கான பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Corona outbreak- Australia at its worst

ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 12,625 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள மருத்துவமனைகளில் 5000-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 159 பேர் உயிருக்கு அபத்தான வகையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசிய ப்ரூநேட் கல்விநிறுவனத்தின் பேராசிரியரான தொற்றுநோயியல் நிபுணர் மைக் டூலே, கொரோனா வைரஸ் பரவிலின் மிக மோசமான கட்டத்தில் ஆஸ்திரேலியா இருக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

தொடரும் இந்நிலைமையை கட்டுக்குள் வைக்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நிபுணர்கள் பலர் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவை போல இங்கேயும் கடுமையான முகக்கவச விதிகள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது அரசுக்கு அவர்கள் விடுக்கும் கோரிக்கையாக உள்ளது.

கொரோனா பரவல் தொடர்பாக ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்ட தலைமை சுகாதாரத்துறை அதிகாரி பால் கெல்லி, பொதுமக்கள் வீடுகளில் இருக்க்கும்போதும் வீட்டைவிட்டு வெளியே வரும்போதும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த நடவடிக்கைக்கு மதிப்பு அளிக்கவில்லை என்றால், மருத்துவத்துறையினருக்கு பெரும் சவாலாக அமையும். அது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பிரச்னையாக உருவாகும் என்று தெரிவித்துள்ளார்.