Breaking News

ஆஸ்திரேலியாவிலுள்ள பாலைவனப் பகுதிகள் சிவப்பு மணல் குவியலாக இருக்கு என்று பலரும் கருதுவதுண்டு. ஆனால் உண்மை அதுவல்ல.

இப்போது நாமிருக்கும் மத்திய பாலைவனப் பகுதியில் உண்மையான நிலவரம் என்ன என்பதை தற்போது தெரிந்துகொள்ளலாம். நீங்கள் பார்க்கும் இவ்விடம் முழுவது பச்சைபசேல் என்று உள்ளது. இப்பகுதியில் சில ஆண்டுகள் 80 மில்லியன் லிட்டர் அளவு மழை பெய்யும், சில ஆண்டுகள் 800 மில்லியன் லிட்டர் மழை அளவு பதிவாகும்.

Many people think that the desert areas in Australia are piles of red sand. But that is not the truth.

ஆஸ்திரேலியாவிலுள்ள அனைத்து பாலைவனங்களும் சிவப்பு மணல் பிரதேசங்களாகவும் அல்லது ஏதுவுமற்றதாகவும் இருப்பது கிடையாது. குறிப்பாக இந்த மத்திய பாலைவனப் பகுதி பரந்த சுற்றுச்சூழல் தேவைக்கு உறுதுணையாக உள்ளது. இங்கு அரிய வகை உயிரனங்கள், தாவரங்கள், மரங்கள் இருக்கின்றன. பல்லுயிர்ச் சூழலுக்கு இது வழிவகுப்பதாக உள்ளது.

ஒரு பாலைவனப் பகுதி செழிப்புடன் இருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாகவே இருக்கும். இங்குவுள்ள தாவரங்கள் மருந்தாகவும், உணவாகவும், ஆயுதமாகவு, கருவியாகவும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஆஸ்திரேலியாவின் விஞ்ஞான வளர்ச்சி புதிய நிலையை அடைந்துள்ளது.

இங்கு முளைத்துள்ள ஸ்பின்னிஃபெக்ஸ் என்கிற புற்கள் வகையைச் சேர்ந்த செடி, பாலியியல் குறைபாடுகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்று இப்பிரதேசத்தில் காணப்படும் ஒவ்வொரு செடி வகைக்கும் தனித்தனி பயன்பாடு உண்டு. அதை தெரிந்துக் கொள்ளும் போது, வாழும் வாழ்க்கை மீதான பொருள் நமக்கு தெரியவருகிறது.