Breaking News

ஆஸ்திரேலிய பெண்கள் லீக் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியில் மெல்பர்னை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது சிட்னி FC.

Sydney FC beat Melbourne 1-0 in the Australian Women's League Championship.

கொரேகொ ஒவலில் நடந்த போட்டியின் கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட கூடுதல் நிமிடங்களின் Kyra Cooney உயர்த்திய ஸ்கோர் மெல்பர்னின் வெற்றியை முடிவுக்கு கொண்டு வந்தது. ஏழாவது ஆண்டு பெண்கள் லீக் போட்டியில் சிட்னி FC -ஐ 1-0 என்ற கணக்கில் வெற்றி பெறச் செய்தது.

Sydney FC beat Melbourne 1-0 in the Australian Women's League Championshipகூடுதல் நேரம் வழங்கப்படும் வரை வெற்றி முழுவதும் இருந்த
மெல்பெர்னை நோக்கியே நிலையில், அதனை முழுவதும் உடைத்து Cooney மேற்கொண்ட உத்திகள் கோல் கீப்பர் Jada Whymanக்கு பிடிகொடுக்காமல் மிகவும் குறுகலான இடத்தில் தனது பெனால்டி ஷாட்டை அடித்தார். பெனால்டிக்கு போகாமல் தவிர்த்தது தங்களுக்கு ஆறுதலை தந்த்தாகவும் மெல்பர்ன் வீராங்கனை Lisa De venna கூறியுள்ளார்.

மேலும், பல்வேறு வாய்ப்புகளுக்கு பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் தாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும், கடைசி வாய்ப்பு வரை வெற்றி எங்களுக்கே வசமாகும் என நம்பிக்கையுடன் காத்திருந்த்தாகவும் De venna தெரிவித்துள்ளார்.

Sydney FC beat Melbourne 1-0 in the Australian Women's League Championship 2வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத அளவுக்கு ஒவ்வொரு முறை கோல் முயற்சியின் போதும் மழுப்பலான சூழலே இருந்து வந்தது. எதிரணியின் கோல் கீப்பர் Whyman சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி கோல் விழாமல் பார்த்துக் கொண்ட போதும், கடைசி நேரத்தில் வெற்றியை தீர்மானிக்கும் Cooney -ன் பந்தை தடுக்கமுடியாமல் தவறவிட்டார்.

Sydney FC beat Melbourne 1-0 in the Australian Women's League Championship. 12014 ம் ஆண்டு வெற்றிக்கு பிறகு சிட்னி FC இரண்டாவது முறையாக சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்கிறது. வரும் போட்டிகளில் நிச்சயம் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வோம் என்று De vanna நம்பிக்கை தெரிவித்துள்ளார்.