Breaking News

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று : மதுரை அரசு மருத்துவமனையில் 12 மருத்துவர்கள், 4 செவிலியர்களுக்கு ஒரே நாளில் தொற்று பாதிப்பு

madurai rajaji hospital

மதுரை மட்டுமல்லாது தென்மாவட்டங்களில் தொற்று பாதிப்புக்கு ஆளாகும் ஏராளமான மக்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வார்டில் குறைவான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களே பணியாற்றி வருகின்றனர். தோற்று பாதித்து தனியார் மருத்துவமனைகளில் இருந்து தாமதமாக அரசு மருத்துவமனைக்கு வந்து அனுமதித்தது, பக்க நோய்கள் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதனிடையே சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 12 மருத்துவர்கள் 4 செவிலியர்களுக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வழங்கப்படும் பாதுகாப்பு கவசங்கள் PPE கிட் தரமானதாக இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொடர்ந்து பல மணி நேரமாக மருத்துவர்கள் செவிலியர்கள் கொரோனா வார்டில் பணியாற்றுவதும் காரணமாக கூறப்படுகிறது. எனவே, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தரமான PPE கிட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Corona infection on the rise in Tamil Nadu 12 doctors and 4 nurses at Madurai Government Hospital were infected on the same dayஇதனிடையே தமிழகத்தில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது அந்த வகையில் ஒரே நாளில் 36 ஆயிரத்து 184 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. கொரோனா அதேநேரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிதீவிரமாக உயர்ந்து வருகிறது ஒரேநாளில் 467 பேர் கொரோனா தொற்றுக்கு பலி ஆகியுள்ளனர். அதே நேரத்தில் 24 ஆயிரத்து 478 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 24ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருக்கும் தளங்களுடன் கூடிய ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் 22ஆம் தேதி சனிக்கிழமையன்று ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின்னர் தொற்று பாதிப்பு உயர்ந்து வருவதன் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதுடன் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link source: https://bit.ly/2SmNsYw