Breaking News

இந்தியாவில் கரும்பூஞ்சை தொற்றால் சுமார் 8800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் இரண்டாவது மக்கள் தொகை மிக்க நாடான இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் தினசரி 4 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துவருக்கின்றனர். இந்த உயிரிழப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வந்தாலும், உயிரிழப்பு குறையவில்லை.

இந்நிலையில் குஜராத், மத்தியபிரதேசம், மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களில் மியூக்கர்மைக்கோஸிஸ் தொற்று பாதிப்பு கடுமையாக உள்ளது.

மேலும் 15 மாநிலங்களில் 8 முதல் 900 பேர் வரை பூஞ்சை
பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் மரணமடைவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களும் இந்த நோயை உடனடியாக தெரிவிக்க வேண்டிய நோய்களாக அறிவித்துள்ளன.

இந்த பூஞ்சை பாதிப்புக்கு உள்ளானவர்களில் 80% பேருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

About 8800 people are affected by black fungus infection in Indiaகொரோனா சிகிச்சை போது வழங்கப்படும் ஸ்டிராய்ட் மருந்துகளாலும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த தொற்று ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் தற்போது அம்போதெரேஸின் என்ற மருந்தை மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் வீழ்ச்சி இந்த பூஞ்சை பாதிப்புக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Link Source: https://bbc.in/3hOxUHG